Ad Code

Responsive Advertisement

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திரும்ப கட்டக்கோரி நெருக்கடி

வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகையை திரும்ப செலுத்தக்கோரி நெருக்கடி கொடுத்து வருவதால் பயனாளிகள் கருவூலகம் மூலம் பணத்தை அரசுக்கு செலுத்தி வருகின்றனர்.தமிழக அரசு வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு கீழ் உள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
இதில், 10ம் வகுப்பு முடித்தோருக்கு ரூ.150, பிளஸ் 2 க்கு ரூ.200, பட்டதாரிக்கு ரூ.300 என்ற விகிதத்தில் மாதந்தோறும் உதவித்தொகை 3 ஆண்டுக்கு வழங்கப்படுகிறது.

அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு செய்து வேலையின்றி காத்திருக்கும் இளைஞர், பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த தொகையை மாதந்தோறும் பயனாளிகளுக்கு வழங்காமல், 3 மாதத்திற்கு ஒரு முறை ரூ.450; 600; 900 என்ற விகிதத்தில் வழங்கி வருகின்றனர்.

நெருக்கடி: சிவகங்கையில் 3,200 பேர் அரசு உதவித்தொகை பெற்று வருகின்றனர். சில நாட்களாக, உதவி தொகை பெற்றவர்களுக்கு பதிவு தபால் மூலம் வேலைவாய்ப்புத்துறை அலுவலகம் மூலம் தகவல் அனுப்புகின்றனர்.அதில், தங்களுக்கு வழங்கப்படும் உதவி தொகையில் நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக வழங்கி விட்டோம். எனவே, கூடுதலாக பெற்ற தொகையை உடனடியாக கருவூலகம் மூலம் அரசின் கணக்கிற்கு செலுத்த வேண்டும் என நெருக்கடி கொடுத்து வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள பட்டதாரிகள் கருவூலகம் மூலம் அரசுக்கு கூடுதலாக பெற்ற பணத்தை செலுத்தி வருகின்றனர்.

சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலக அலுவலர் ஒருவர் கூறும்போது: இதற்கு முன்பு வரை ஊழியர்கள் மூலம் உதவித்தொகை அந்தந்த பயனாளிகளின் முகவரிக்கே அனுப்பினர்.

அப்போது தான் தவறுதலாக பலருக்கு கூடுதல் நிதியை அனுப்பி விட்டனர். இதை தவிர்க்க கம்ப்யூட்டரில் 'ஆன்-லைன்' மூலம் அந்தந்த பயனாளியின் வங்கி கணக்கிற்கே உதவி தொகை வழங்கி வருகிறோம். கூடுதலாக பெற்ற தொகையை அரசு கணக்கிற்கு திரும்ப செலுத்த வேண்டும், என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement