Ad Code

Responsive Advertisement

தியானம் என்னவெல்லாம் செய்யும்? - ஆராய்ச்சிகள் கூறும் உண்மை

  
தியானம் ஆன்மிக வளர்ச்சிக்கு மிக சக்திவாய்ந்த ஒரு கருவி. உடல் மன கட்டுப்பாடுகளிலிருந்து ஒருவரை விடுவிக்கும் கருவியாகவும் இது இருக்கும். உள்நிலை அறிவியலை பயில்பவர்கள், அதனைச் சொல்லித் தருபவர்கள் பல்வேறு உடல், மன சம்பந்தமான பலன்களை அடைவதாகச் சொல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் பெருகி வரும் அறிவியல் ஆராய்ச்சிகள் இதனை ஊர்ஜிதப்படுத்துகின்றன.




ஈஷாவின் அறிமுக யோக வகுப்பான ஷாம்பவியை பல லட்சம் பேர் கற்றுள்ளனர். இது மிகத் தொன்மையான ஒரு கிரியா பயிற்சியாகும். இதைச் செய்வதன் மூலம் உணர்ச்சி வசப்படுவது குறைவது, ஞாபக சக்தி அதிகரித்தல், மனம்குவிப்புத் திறன் மேம்படுதல், ஸ்திரமான உடல் ஆரோக்கியம் போன்ற பல பலன்களை மக்கள் உணர்கின்றனர். இந்த கிரியாவினை தொடர்ந்து செய்யும்போது மூளையின் செயல்பாடு பலமடங்கு அதிகரிப்பதையும் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன


கிரியா எப்படி வேலை செய்கிறது?:


சத்குரு இதைப் பற்றி சொல்லும்போது, "யோகப் பாரம்பரியத்தில், மனித உயிர் 5 அடுக்குகள் உடையது என்று சொல்கிறோம். அவை ஸ்தூல உடல், மன உடல், சக்தி உடல், சூட்சும உடல், ஆனந்த உடல் ஆகும். பெரும்பாலான மனிதர்கள் உடல்நலமில்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களது ஸ்தூல, மன, சக்தி உடல்கள் ஒரு இணைவுடன் செயல்படாமல் இருப்பதனால்தான். இவற்றை நாம் ஒரு இணைவாக செயல்படும் நிலைக்கு எடுத்துவந்தால், ஆனந்தம் என்பது கனவாக அல்லாமல், மனிதனது இயல்பான நிலையாக இருக்கும்," என்பார்.

ஆராய்ச்சிகள் சொல்வதென்ன?: ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியைப் பற்றிய ஆராய்ச்சிகள் பலவிதமான பதில்களைத் தருகின்றன. சிலருக்கு வியாதிகள் குணமடைந்துள்ளன, சிலருக்கு மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகள் சீரடைந்துள்ளன, வேறு சிலருக்கு தூக்கம் சீர்பட்டிருக்கிறது, இதயம் வலுபெற்றிருக்கிறது, மூளை சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. இதுபோல் பல விதங்களில் ஷாம்பவி பயிற்சி, தான் வழங்கும் பலன்களை வெளிகாட்டி இருக்கிறது. கீழே சில முக்கியமான விஷயங்களை மட்டும் பார்ப்போம்.


இதய ஆரோக்கியம் மேம்படுதல்:


2008 மற்றும் 2012ம் ஆண்டுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி, இருதய ஆரோக்கியத்தை ஷாம்பவி வழங்குகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. பயிற்சி செய்யும்போது இதயத்துடிப்பு சீரடைவதையும் அது காட்டுகிறது. இதனால் ஷாம்பவி பயிற்சி செய்பவர்களது ஆயுள் நீள்வதற்கான சாத்தியங்கள் மிக அதிகம். ஈஷா யோகா, ஷாம்பவி பயிற்சி செய்பவர்கள் மனஅழுத்தம் உள்ள சூழ்நிலையில் எளிதில் பாதிப்படைவதில்லை, அதிகப்படியான பாரத்தை அவர்களால் தாக்குப்பிடிக்க முடிகிறது என்று இந்த ஆய்வில் முடிவு செய்யப்பட்டது.

மூளைக்குள் ஒட்டுமொத்த சேர்மானம் சிறப்பாக இருக்கிறது: ஐஐடி டில்லியைச் சேர்ந்த சென்டர் ஃபார் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் செய்த ஒரு ஆய்வில், ஷாம்பவி பயிற்சிக்கு முன், பயிற்சிக்கு பின் மக்கள் எவ்வாறு உள்ளனர் என்று கணக்கிடப்பட்டது. இதில் தியானம் செய்பவர்களது வலது மூளையும் இடது மூளையும் சிறப்பாக ஒன்றிணைந்து செயல்படுவதை கண்டறிந்து உள்ளனர். இந்த டெஸ்ட் வலது, இடது மூளைப் பகுதிகளின் கூட்டுச் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன என்பதை கணிக்கிறது. இஇஜி ஸ்பெக்ட்ரல் பான்ட் கணக்குகளான ஆல்பா, பீட்டா, காமா அளவுகளின்படி பார்த்தாலும், ஷாம்பவி தியானம் செய்பவர்கள் டென்ஷனுக்கு உள்ளாவது குறையும். டெல்டா மற்றும் ஆல்பா ஒரு குறிப்பிட்ட விதத்தில் சேரும்போது, ஒருவருக்கு இருக்கும் மேம்பட்ட ஆறாம் அறிவினை அது உணர்த்தும்.


மேம்பட்ட தூக்கம்:


போர்சுகலில் உள்ள ஐரோப்பிய தூக்க ஆராய்ச்சி மையம் செய்த ஆய்வில், ஒரு குறிப்பிட்ட வயதுடைய, குறிப்பிட்ட வாழ்க்கை சூழலில் உள்ள ஷாம்பவி தியானம் செய்யும் மற்றும் செய்யாத ஆண்களை ஒப்பிட்டு ஆய்வு செய்தது. அதில், தூக்கத்தின் அளவு தியானம் செய்யாதவர்களுக்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. மாறாக தியானம் செய்யும் ஆண்கள் தரமான உறக்கத்தினை உணர்ந்தார்கள். ஷாம்பவி தியானம் தரமான தூக்கத்தினை வழங்கும் என ஆய்வு முடிவுகள் சொன்னது.

மேம்பட்ட கவனம், மனம்குவிப்புத் திறன்: ஈஷா யோகா செய்வதற்கு முன், ஈஷா யோகா செய்ததற்கு பின், என்று ஆய்வு செய்யப்பட்டன. ஈஷா யோகா செய்தவர்கள் செய்யும் பிழை மிகக் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. இவ்விரு டெஸ்டிற்கு பின், "தியானம் நம் மனதின் திறனை, மனம் குவிப்புத் திறனை மேம்படுத்துகிறது" என்று அந்த ஆய்வு சொன்னது.

அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியானா பல்கலைக்கழகத்தின் மனநலப் பிரிவு செய்த ஆய்வில், தியானம் செய்பவர்களிடத்தில் உடலளவில், அமைப்பளவில், செயல்பாட்டு நிலையில் பல மாற்றங்கள் நடப்பதால் தியானம் செய்யாத மற்றவர்களை விட ஈஷா யோகா தியானம் செய்பவர்களது மனம் குவிப்புத்திறன், உடனடியாக கவனத்தை திசைத்திருப்ப தேவையிருக்கும் சூழ்நிலையில் உடனடி கவனம் செலுத்துவது, வலது, இடது மூளைகளின் வளைவுத்தன்மை, கட்டாயத்தினால் உந்தப்பட்டு செயல்படும் தன்மை குறைவது போன்ற விஷயங்கள் கண்டறிப்பட்டுள்ளன.


மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள் குறைதல்:


பொதுவாக, 75 சதவிகித பெண்கள் மாதவிடாய் பிரச்சனைக்கு உட்படுவதாக சொல்லப்படுகிறது. இதனால், அவர்களுக்கு உடல், மனம், சமூகம், பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்பிரச்சனைக்கு அளிக்கப்படும் மருத்துவத்தில் பெரும்பாலானோர் திருப்தியடைவதில்லை, இதனால் கடைசி உபாயமாக அறுவைசிகிச்சையை தேர்ந்தெடுக்கின்றனர். தற்சமயம், யோகா இதற்கு சிறப்பான உபாயமாக கருதப்பட்டு வருகிறது. அதோடு இதன் பலன்கள் நம்பிக்கை அளிப்பதாகவும் உள்ளன.

அமெரிக்காவைச் சேர்ந்த பூலே மருத்துவமனை, 14 முதல் 55 வயதுடைய, ஈஷாவில் கற்றுத்தரப்படும் ஷாம்பவி தியானம் செய்யும் 128 பெண்களிடம் எடுத்த சர்வேயில் சில உண்மைகள் தெரிய வந்தன. அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, லெபனான் போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இதில் பங்குபெற்றனர். ஷாம்பவி தியானத்திற்கு முன், ஷாம்பவி தியானம் செய்யத்துவங்கி 6 மாதங்களுக்கு பின், அவர்களுக்கு மாற்றம் தெரிந்ததா எனக் கேட்கப்பட்டது. அதிகப்படியான உதிரப்போக்கு, மாதவிடாய்க்கு முன் ஏற்படும் றிவிஷி எனப்படும் சில விளைவுகள், சீரில்லாத மாதவிடாய், மருந்தோ அறுவைசிகிச்சையோ தேவைப்பட்ட சூழ்நிலை, ஒவ்வொரு முறையும் வேலை செய்ய இயலாமல் போகும் நிலை இவற்றின் அடிப்படையில் கேள்விகள் எழுப்பட்டன.


இதில், அதிகப்படியான உதிரப்போக்கு 57 சதவிகிதம் பேருக்கும், மாதவிடாய்க்கு முன்னர் ஏற்படும் எரிச்சல், அழுகை, சோர்வு, மனஅழுத்தம், வீண்வாதம் போன்றவை 72 சதவிகிதம் பேருக்கும், மார்பகங்கள் வீங்குவது, வலிப்பது 40 சதவிகிதமும், உடல்வீங்கிப் போவது உடல் எடை கூடுவது 50 சதவிகிதம் பேருக்கும் குறைந்துள்ளது அறியப்பட்டது. 63 சதவிகிதம் பேருக்கு அறுவைசிகிச்சை தேவையில்லாமல் போனது, 83 சதவிகிதம் பேருக்கு வேலைக்கு செல்லாமல் பாதிப்படைவதிலிருந்து நிவாரணம் கிடைத்தது. இதனால் ஆராய்சியாளர்கள், "ஈஷா யோகா மாதவிடாய் சார்ந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் பலவிதமான பலன்களை வழங்குவதால் அதனை சிறப்பு மருத்துவமுறையாக வழங்கலாம்," என்ற முடிவிற்கு வந்தார்கள்.


மருந்து தேவை குறைகிறது


: 536 பேர் அளித்த பதிலின் அடிப்படையில், ஈஷாவின் ஷாம்பவி தியானம் செய்பவர்களது மருந்துத் தேவை குறைகிறது, மனஅழுத்தம் ஏற்படுவதில்லை, அலர்ஜிகளிலிருந்து விடுதலை, ஆஸ்துமா மற்றும் பல உடல் உபாதைகளிலிருந்து நிவாரணம் கிடைப்பதை பார்க்க முடிகிறது. 91 சதவிகிதம் பேர் மனதில் அமைதி உணர்வதாக சொன்னார்கள். 79 சதவிகிதம் பேர் நல்ல சுறுசுறுப்பாக, சக்தியுடன் இருப்பதாக சொன்னார்கள். 74 சதவிகிதம் பேருக்கு தன்னம்பிக்கை வளர்ந்துள்ளது. 70 சதவிகிதம் பேருக்கு ஞாபக சக்தி அதிகரித்துள்ளது, செயல்பாட்டுத்திறன் அதிகரித்துள்ளது. சளித் தொல்லை, தலைவலி, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு, இருதய நோய் என பலதரப்பட்ட உடல்நலக் கோளாறுகளுக்கு ஈஷா யோகா நல்ல நிவாரணமாக இருப்பது கண்டறியப்பட்டது.


சுருக்கமாக சொல்வதென்றால்...


இவை அத்தனை விஷயங்களையும் கணக்கிட்டுப் பார்க்கும்போது, ஈஷாவின் ஷாம்பவி மஹாமுத்ரா தியானம் செய்வதினால் ஏற்படும் பலன்களை தெளிவாக உணர முடிகிறது. தொடர்ந்து பயிற்சி செய்து வருவதினால், இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மருந்து உட்கொள்ளும் அளவு குறைதல், வியாதிகளில் இருந்து நிவாரணம் என்று ஒரு நீண்ட பட்டியலை வழங்க முடியும்.

முயற்சி செய்து பாருங்கள்...: ஈஷா யோக மையம் வழங்கும் ஷாம்பவி மஹாமுத்ராவின் அழகே அதனை வெறும் 21 நிமிடங்களில் செய்துவிடலாம் என்பதே. இது ஈஷா வழங்கும் முக்கியமான ஒரு பயிற்சி. இது உலகம் முழுவதும் பல இடங்களில் சொல்லித் தரப்படுகிறது.

ஈஷா கிரியா எனும் எளிமையான தியானம், சில ஆசனங்களுடன் கூடிய உயிர்நோக்கம் வகுப்புகளும் தமிழகம் தழுவிய அளவில் வழங்கப்படுகின்றன. முதலில் கற்றுக்கொள்ள இது இன்னும் சுலபமான பயிற்சி. தியானம் செய்திட தயாராகுங்கள்.

ஷாம்பவி தியான வகுப்பில் இணைய - உயிர்நோக்கம் வகுப்பில் சேர - (0422)-2515300

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement