Ad Code

Responsive Advertisement

'மேகி நூடுல்ஸ்' பாதுகாப்பற்றது!

பன்னாட்டு நிறுவனமான, 'நெஸ்லே இந்தியா'வின் பிரபல தயாரிப்பான, 'மேகி நுாடுல்ஸ்'சில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக அலுமினியம் கலந்து உள்ளது என, டில்லி உணவு தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும், அந்த உணவு பண்டம், சாப்பிட பாதுகாப்பற்றது எனவும், டில்லி ஆய்வக முடிவுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, பல மாநிலங்களில் மேகி நுாடுல்ஸ் உணவு பாக்கெட்டுகள், கடைகளில் ஷோகேஸ்களில் இருந்து இறக்கப்படுகின்றன.பீகாரில், 'மேகி' நுாடுல்ஸ்சை வாங்கி சாப்பிட்ட வழக்கறிஞர் ஒருவருக்கு உடல் நலமில்லாமல் போனதை அடுத்து, மேகி நுாடுல்ஸ்சை தயாரிக்கும், 'நெஸ்லே இந்தியா' நிறுவனத்தின் அதிகாரிகள் இருவர், அதன் விளம்பர படத்தில் நடித்த, பாலிவுட் பிரபலங்கள் அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா மீது வழக்கு பதிவு செய்ய, பீகார் மாநிலத்தின், முசாபர்பூர் மாவட்ட கோர்ட், போலீசுக்கு நேற்று உத்தரவிட்டது.

மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி, தேவைப்பட்டால், இந்த ஐந்து பேரையும் கைது செய்து விசாரணை நடத்தலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.மேகி நுாடுல்ஸ் உணவு பண்டத்தில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக, எம்.எஸ்.ஜி., எனப்படும், 'மோனோ சோடியம் குளுடமேட்' என்ற ரசாயனம் இருந்தது, உ.பி.,யில் கண்டுபிடிக்கப்பட்டது.சம்பந்தப்பட்ட அந்த நிறுவனம், அதன் விளம்பர படங்களில் நடித்த பாலிவுட் நட்சத்திரங்கள் மூவர் மீது எந்த நேரமும் நடவடிக்கை பாயும் என, எதிர்பார்க்கப்படும் நிலையில், இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement