Ads

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, June 22, 2015

தொலைதூர கல்வி முறையில் எம்.பில்., - பிஎச்.டி., படிப்பு

யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் வேதபிரகாஷ், டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:தொலைதுாரக் கல்வி முறையில், எம்.பில்., -  பிஎச்.டி., போன்ற உயர்மட்ட பட்டங்களை பெறும் வகையில் படிப்புகளை வழங்குவது குறித்து, யு.ஜி.சி., தீவிர பரிசீலனையில் ஈடுபட்டு வருகிறது.
இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால், 10 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர். இதுகுறித்து, யு.ஜி.சி.,யின் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். இவ்வாறு, வேதபிரகாஷ் கூறினார். தொலைதுாரக் கல்வி முறையில், எம்.பில்., -
பிஎச்.டி., போன்ற பட்டப்படிப்புகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக, நான்கு ஆண்டுக்கு முன், யு.ஜ.சி., உறுதி அளித்திருந்தது. அதன்படி, இத்திட்டத்தை அமல்படுத்த, யு.ஜி.சி., தீவிரம் காட்டத் துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 

No comments :

Post a Comment

"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை"யின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை"