Ad Code

Responsive Advertisement

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோர் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்: தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோர் மதிப்பெண் சான்றிதழ்களை தாங்களே பதிவிறக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோருக்கு பள்ளிகள் - தேர்வு எழுதிய மையங்கள் மூலமாக தலைமை ஆசிரியர்களால் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்ப்டடது.

 மாணவர்கள் தாங்களே தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்தில் இருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும் 4-ஆம் தேதி முதல் www.dge.tn.nic.in  என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 இந்த இணையதள முகவரிக்குச் சென்றால், Provisional Mark Sheet SSLC Result-March  2015 என்ற திரை தோன்றும். மாணவர்கள் தங்களது மதிப்பெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை தட்டச்சு செய்ய வேண்டும். 
 மேலும், திரையில் தோன்று குறியீட்டினை அதில் உள்ளது போலவே டைப் செய்ய வேண்டும்.
 அதன்பின்பு, View Result  என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அப்போது பதிவெண் பெயரில் pdf file பதிவிறக்கமாகும். இந்தக் கோப்பில் தேர்வருக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இருக்கும். அதை அப்படியே பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement