Ad Code

Responsive Advertisement

முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கை: பதிவு செய்ய ஜூலை 3 கடைசி நாள்

முதுநிலை பொறியியல் படிப்புகளான எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கு இணையதளத்தில் பதிவு செய்ய ஜூலை 3 கடைசித் தேதியாகும். நிறைவு செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்க ஜூலை 4 கடைசித் தேதியாகும்.

 2015-16 கல்வியாண்டுக்கான கலந்தாய்வு அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு www.annauniv.edutanca2015 என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு ஜூலை 3 மாலை 5.30 மணி கடைசியாகும்.
 அவ்வாறு இணையத்தில் பதிவு செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து "ஏ 4' அளவிலான உறையிலிட்டு "செயலர், தமிழ்நாடு பொது சேர்க்கை- 2015, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 600 025' என்ற முகவரியில் சமர்ப்பிக்க ஜூலை 4 மாலை 6.30 மணி கடைசியாகும்.
 தகுதி: இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இளநிலை பொறியியல் படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
 இடஒதுக்கீடு அடிப்படையில் விண்ணப்பிப்பவர்கள் (எஸ்.சி, எஸ்.டி, எஸ்.சி.ஏ.) 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட் 2015) அல்லது பொறியியல் பட்டதாரி நுண்ணறிவுத் தேர்வில் (கேட் 2015) தகுதி பெற்றிருப்பது கட்டாயமாகும்.
 கட்டணம்: விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ. 500-க்கான வரைவோலையை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். "செயலர், தமிழ்நாடு பொது சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை' என்ற பெயரில் சென்னையில் செலுத்தத் தக்க வரைவோலையாக எடுக்கப்பட வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, எஸ்.சி.ஏ. பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 250 செலுத்தினால் போதுமானது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement