மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சுயவேலைவாய்ப்புக்கான சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. இதுகுறித்து அப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுரை காமராசர் பல்கலைக்கழக, வயது வந்தோர் தொடர்கல்வி, விரிவாக்கப்பணித்துறையில் படித்த வேலைவாய்ப்பற்ற மாணவ, மாணவிகளுக்கு சுய வேலைவாய்ப்பு சான்றிதழ் பயிற்சிக்கான சேர்க்கை மே 6 முதல் தொடங்க உள்ளது.
இதற்கான விண்ணப்பப் படிவம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. முதலில் வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பத்தாம் வகுப்பு தேறியவர்கள் (அ) தவறியவர்களுக்கு "ரெஃப்ரிஜிரேசன்-ஏர் கண்டிசனிங்', "எலக்ட்ரீசியன்', "எலக்ட்ரிகல் - எலக்ட்ரானிக்ஸ்' உள்ளிட்ட பிரிவுகளுக்கு ஓராண்டுக்கான செய்முறை பயிற்சிகள் அளிக்கபட உள்ளது.
இதன்மூலம், சுய தொழில் தொடங்குவதற்கும், தொழில்நுட்பப் பணியில் சேரவும், வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பு உள்ளது. மேலும், பயிற்சி தொடர்பான தகவலுக்கு 0452-2537838 என்ற தொலைபேசி எண்ணிலும், விண்ணப்பப் படிவங்களைப் பெற மதுரை காமராசர் பல்கலைகழக அலுவலகத்தை நேரிலும் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை