Ad Code

Responsive Advertisement

குரூப் - 4 'ரிசல்ட்' வெளியீடு

 பத்து லட்சம் பேர் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, குரூப் - 4 தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. நில அளவர், 702; வரைவாளர், 52; தட்டச்சர், 1,653; இளநிலை உதவியாளர், 2,872; குறுக்கெழுத்து தட்டச்சர், 331; வரித்தண்டலர், 22, உட்பட, பல பதவிகளுக்கான, 4,963 காலியிடங்களை நிரப்ப, குரூப் - 4 தேர்வு, கடந்த ஆண்டு டிச., 21ம் தேதி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையமான, டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்தப்பட்டது.
இதில், நேர்முகத்தேர்வு கிடையாது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும், 'ரேங்க்' அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படுவர். இத்தேர்வுக்கு, 12.72 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; தேர்வில், 10.61 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகளை, நேற்று, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. தேர்வர்கள், http:/www.tnpsc.gov.in/ResultGetg42015rank.html , அல்லது http:/www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில், தங்கள் தரவரிசையை தெரிந்து கொள்ளலாம். இந்த முறை, 10 லட்சம் பேரும் தங்கள் நண்பர்கள், தெரிந்தவர்களின் பதிவு எண்ணை கொண்டு, அதன் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். ''ஜூன் 15ம் தேதி முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது; சான்றிதழ் சரிபார்ப்பு தேதி, தேர்வர்களுக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்படும்,'' என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்து உள்ளார். தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, ஷோபனா கூறும் போது, ''ஒவ்வொரு தேர்வரின் தரம் என்ன, அவரது குறிப்பிட்ட பிரிவுக்குள் தரம் என்ன என்று, தனித்தனியாக தெளிவாகத் தரப்பட்டு உள்ளது. இதை வைத்து, தேர்வு முடிவுகளை எளிதில் தெரிந்து கொள்ளலாம்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement