Ad Code

Responsive Advertisement

வேளாண் படிப்பு: திருநங்கையருக்கு, 2 சதவீதம் ஒதுக்கீடு

தமிழ்நாடு வேளாண் பல்கலை படிப்புகளில் சேர, ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் முறை, இந்தாண்டு அமலுக்கு வருகிறது. கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் ராமசாமி கூறியதாவது:

வேளாண் பல்கலையில், நடப்பாண்டு முதல் மாணவர்கள் சேர்ப்பு முற்றிலும், ஆன்-லைன் முறையில் நடக்கிறது. மத்திய அரசு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இம்முயற்சிக்கு, 17 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. ஆன்-லைன் விண்ணப்பம், 600 ரூபாயாகவும், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு, 300 ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மே, 15ல், விண்ணப்பம் பெறும் பணி துவங்கும். ஜூன், 13ல், கடைசி நாள்.
வேளாண் பாடத்திட்டங்களை கற்றுத்தருவது, களப்பயிற்சி ஆகியன, 60:40 என்ற விகிதாசாரத்தில் இருந்தன. இந்த ஆண்டு முதல் இது, 50:50 என்ற அளவில் இருக்கும்.
தனியார் பல்கலையில், மூன்று ஆண்டு கால பாடத்திட்டமாக மனையியல் பாடம் உள்ளது. வேளாண் பல்கலையிலும் உள்ள இப்பாடத்திட்டம், நடப்பு ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளாக மாற்றப்படுகிறது. அது, உணவு மற்றும் ஊட்டச்சத்து அறிவியல் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்பிரிவில், 40 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வேளாண் படிப்புகளில், திருநங்கைகளுக்கு, இரண்டு சதவீதமும், ஜம்மு-காஷ்மீர் மாணவர்களுக்கு, இரண்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
வேளாண் கல்லுாரி தனியார் துவங்க, 110 ஏக்கர் நிலம் தேவை. இப்பரப்பளவு நிலம் கல்லுாரி பெயரில் பதிவு செய்திருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
இவ்வாறு, ராமசாமி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement