Ad Code

Responsive Advertisement

10ம் வகுப்பு தேர்வு முடிவு

தஞ்சை அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவி வைஷ்ணவி தமிழில் 100/99 மதிப்பெண்களும் மற்ற பாடங்களில் 100/100 மதிப்பெண்களும் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.


தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி வைஷ்ணவி 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம்.


ஈரோடு மாவட்டம் முதலிடம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 
ஈரோடு மாவட்டம் 98.04 சதவீத தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது. 

97.98 சதவீத தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் இரண்டாமிடமும், 

97.62 சதவீத தேர்ச்சி பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளன.

இன்றயை 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த முடிவுகள் இது வரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 41 பேர் மாணவ , மாணவிகள் அபார சாதனை படைத்துள்ளனர்.இன்றைய தேர்வு முடிவுகளை வெளியிட்டு தேர்வு துறை இயக்குனர் கூறியதாவது:

இந்த தேர்தவில் 10 லட்சத்து 60 ஆயிரத்து 866 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இது கடந்த ஆண்டை விட 40 ஆயிரம் பேர் அதிகம். இந்த ஆண்டு முடிந்த தேர்தலில், 92. 9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 95. 4 சதவீதம் மாணவிகளும், 90.4 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த முறை மாணவ, மாணவிகள் அரும் பெறும் சாதனை படைத்துள்ளனர். இதனால் அனைத்து முதல் ரேங்கு மாணவர், மாணவிகளின் பெயரை அறிவிக்காமல் ( நேரம் கருதி நான் அரசு பள்ளியில் படித்து முதலிடம் பெற்ற 3 மாணவர்களை மட்டும் அறிவிக்கிறனே் என்றார். 


இன்றைய முடிவில் 499 மார்க்குகள் பெற்று 41 பேர் முதலிடமும், 192 மாணவ, மாணவிகள் இரண்டாமிடமும், 540 பேர் இரண்டாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர், 


ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 853 பேர் அறிவியலில் 100க்கு 100 பெற்றுள்ளனர். கணிதத்தில் 27 ஆயிரத்து 134 பேர் கணிதத்தில் 100க்கு 100 ம், சமூக அறிவியலில் 51 ஆயிரத்து 629 பேர் 100க்கு 100ம், மார்க்குகள் எடுத்துள்ளனர். பிற மொழிப்பாடங்களில் 500 க்கு 500 மார்க்குகள் பெற்று 5 மாணவ, மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனர்.


முதலிடம் என்பது ஒருவர் அல்லது இருவர் என பிடித்து வந்த காலம் மாறி பலர் இந்த இடத்தை பிடிக்கும் சூழலை மாணவ, மாணவிகள் உருவாக்கியுள்ளனர். 


பலர் ஒரே மதிப்பெண்கள் பெற்றாலும் , வரும் காலத்தில் இது போன்று முதல் ரேங்கு என்பது எந்த முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என விவாத பொருளாகி இருக்கிறது. முதலிடம், சாம்பியன் யார் என்பது அறிவிப்பதில் இன்னும் பழைய முறையே பின்பற்றாமல் புதிய முறை யோசிக்கலாமே என்பதே தற்போதைய பேச்சு. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement