Ad Code

Responsive Advertisement

ஜூன் 1ம் தேதி 9ம் வகுப்பு வரை இலவச புத்தகம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவியருக்கு, ஜூன் 1ம் தேதி, இலவசப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, தமிழக அரசு, 14 இலவசத் திட்டங்களை அமல்படுத்துகிறது. இலவச 'ஜியோமெட்ரிக் பாக்ஸ்', 'க்ரயான்ஸ்' பென்சில்கள், சீருடை, காலணிகள், பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகின்றன. இதில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, கடந்த ஏப்ரலில் புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அனைத்து வகுப்புகளுக்கும் பாடப்புத்தகங்களை, ஜூன் 1ம் தேதி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக, நேற்று முதல் அனைத்து பள்ளிகளுக்கும், பாட புத்தக மண்டல அலுவலகங்கள் மற்றும் பாடப்புத்தக இருப்பு மையங்களில் இருந்து, பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பப்பட்டன. வரும் 25ம் தேதிக்குள், பள்ளிகளில் புத்தகங்களை வாங்கி வைக்குமாறு, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement