Ad Code

Responsive Advertisement

மே முதல் வாரத்தில் இன் ஜினியரிங் விண்ணப்பம் விநியோகம்

என்ஜினீயரிங் படிப்பில் சேர 2½ லட்சம் விண்ணப்ப படிவம் அச்சடிக்க அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்து, மே முதல் வாரத்தில் வினியோகிக்க உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விண்ணப்பம்
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக துறை என்ஜினீயரிங் கல்லூரிகள், மண்டல என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்பட மொத்தம் 609 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள். இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். சேர விண்ணப்பம் 2½ லட்சம் அச்சடிக்கப்பட உள்ளது. விண்ணப்ப கட்டணம் உயரவில்லை. இந்த வருடமும் சென்னையில் உள்ள அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் தான் கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது.
என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் மாதம் இறுதியில் தொடங்கப்பட உள்ளது. ஜூலை முதல் வாரத்தில் பொது கலந்தாய்வு தொடங்கும். இது குறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:– புதிய கல்லூரிகள் பிளஸ்–2 தேர்வு முடிவு கடந்த ஆண்டு மே 9–ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த ஆண்டும் அதற்குள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. முடிவு வெளியிடப்படுவதற்கு 4 நாட்களுக்கு முன்பாக என்ஜினீயரிங் விண்ணப்பம் கொடுக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் நிரந்த அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகள் அந்தந்த வருடம் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் பெறவேண்டும்.

இதற்காக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் ஆய்வு நடத்தி முடித்துவிட்டனர். எந்த பாடப்பிரிவுக்கும் மாணவர்கள் சேர்ப்பதற்கான எண்ணிக்கை அதிகரிக்கவும், கூடுதல் பிரிவை தொடங்கவேண்டும் என்றாலும் என்.பி.ஏ. சான்றை சம்பந்தப்பட்ட என்ஜினீயரிங் கல்லூரி பெற்றிருக்கவேண்டும். தமிழ்நாட்டில் 10 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு சில பிரிவுகளை மூடுவதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன. ஏ.ஐ.சி.டி.இ.க்கும் (அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு) விண்ணப்பித்துள்ளனர். புதிதாக கல்லூரிகள் தொடங்குவதற்கு 4 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement