Ad Code

Responsive Advertisement

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆக தயாராவது எப்படி: வழிகாட்டுகிறார் ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு

 "உயர் கல்வி படிப்பில் சேரும்போதே மாணவர்கள் தனக்கென இலக்கை ஏற்படுத்திக்கொண்டு படித்தால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என்பது அவர்களுக்கு தொட்டு விடும் தூரமாக இருக்கும்," என தமிழக கடலோர காவல் படை ஏ.டி.ஜி.பி., சைலேந்திர பாபு தெரிவித்தார்.

மதுரையில் தினமலர் சார்பில் நடந்த உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சியில் 'சிவில் சர்வீசசில் எதிர்காலம்' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் உயர் கல்வி குறித்து சரியான இலக்கை நிர்ணயிக்க வேண்டும். மாணவர்கள் அறிவு ரீதியான தேடுதல்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். புத்தகங்கள் அதிகம் படிப்பதால் பல்துறை அறிவு வளர்ச்சி ஏற்படும். கல்லூரி காலங்களிலேயே பாட அறிவுடன் வேலைவாய்ப்பிற்கான அறிவுசார்ந்த கூடுதல் தகுதிகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். விரும்பிய துறையை தேர்வு செய்து ஆர்வத்துடன் படிக்க வேண்டும். இலக்கு நிர்ணயித்து படித்தால் சிவில் சர்வீஸ் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உட்பட 22 பணிகளுக்கான தேர்வு மூன்று கட்டங்களாக நடக்கும். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றாலே அரசு பயிற்சி மையங்களில் சேர்ந்து உதவித் தொகையுடன் அடுத்த கட்ட தேர்வுகளை எழுதும் வசதி உள்ளது. மெயின் தேர்வு விரிவாக எழுதும் வகையில் இருக்கும். தமிழிலும் எழுதலாம். இத்தேர்வை எழுத ஏழ்மை ஒரு தடையாக இருக்காது. மாணவர்கள் ஆங்கில புலமை பெறுவதுடன் பிரெஞ்ச், ஜெர்மன் மொழிகளையும் கற்று தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் மாணவி மலாலா, 'என்னை தீவிரவாதிகள் சுட்டுவிட்ட பெண்ணாக பார்க்காமல், மில்லியன் கணக்கில் படிக்காத பெண்களை படிக்க வைக்க போராடும் ஓர் போராளியாக பாருங்கள்' என தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாணவரும் அவர் போன்று ஓர் இலக்கை நிர்ணயித்து சமுதாயத்திற்கு பயன்தர வேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement