Ad Code

Responsive Advertisement

மாணவர்களுக்கு 'சீட்' மறுப்பு: நான்கு பள்ளிகள் மீது வழக்கு

பெங்களூரு: கல்வி உரிமை சட்டத்தில் மாணவர்களுக்கு, 'சீட்' கொடுக்க மறுத்த, நான்கு கல்வி நிலையங்கள் மீது, முதன்முறையாக வழக்கு பதிவாகியுள்ளது.

தனியார் பள்ளிகளில், கல்வி உரிமை சட்டத்தில், 1.11 லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல் சுற்றில், 81 ஆயிரத்து 536 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இரண்டாவது சுற்று, இன்னும், 10 நாட்களில் துவங்கவுள்ளது. கல்வி உரிமை சட்டத்தின் கீழ், மாணவர்களை சேர்க்க மறுத்ததற்காக, எட்டு பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இதற்கிடையில், கல்வி உரிமை சட்டத்தில் இடஒதுக்கீடு செய்ய மறுத்ததற்காக, நான்கு பள்ளிகள் மீது, லோக் ஆயுக்தா வழிகாட்டுதலின்படி, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அச்சிவ் ஸ்கூல் ஆப் எஜுகேஷன் செயலர் பவன் கூறியதாவது: நாங்கள் மைனாரிட்டி பிரிவில், எங்கள் பள்ளிகளை சேர்க்க விண்ணப்பித்துள்ளோம். கல்வித்துறை அதிகாரிகள், எந்த முடிவையும் தெரிவிக்காமல், கடந்தாண்டு செப்டம்பர் முதல் இழுத்தடிக்கின்றனர். இதுகுறித்து, ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், அந்த உத்தரவையும் எதிர்பார்த்து உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement