Ad Code

Responsive Advertisement

வீட்டுக் கடனுக்கு ஒரு நல்ல செய்தி

வீட்டுக் கடன் குறித்த செய்திகள் பத்திரிணகைகளில் மீண்டும் வலம்வரத் தொடங்கி யிருக்கின்றன. இம்முறை அதன் வட்டி விகிதக் குறைப்பு கவனப்பட வைக்கிறது. பாரத ஸ்டேட் வங்கி வட்டிக் குறைப்பு விகிதத்தில் அடிப்படைப் புள்ளிகளில் 25 புள்ளிகள் குறைத்து முன்னிலை வகிக்கிறது. இந்தத் திட்டம் ஏப்ரல் 13, 2015 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இதனால் குறைந்தபட்ச வட்டி விகிதம் 9.9 சதவிகிதமாக இருக்கும். பெண் வீட்டுக் கடனாளிகளுக்கு மேலும் 0.5 குறைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான வட்டி விகிதம் 9.85 சதவிகிதமாகும்.

ரிசர்வ் வங்கி அறிவித்த வட்டிக் கொள்கையையடுத்து ஏப்ரல் 7-ந் தேதி் முதல் பொதுவாக வட்டி விகிதம் குறித்த கருத்துகள் மையமிட்டுள்ளன. நிகழ்ச்சி ஒன்றுக்குப் பின்னர் பத்திரிகையாளரிடம் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், “வங்கிகளின் நிதி நிலைமைக்குக் காரணம் ரிசர்வ் வங்கியின் உறுதியான கொள்கைகள்தான்” என்றார்.
இந்திய வங்கிகள் தங்களது வைப்புத் தொகைச் சொத்து, மொத்தச் சொத்து மற்றும் மொத்தக் கடன் சமன்பாடு ஆகியன வட்டி விகிதத்தை விதிக்கும் கருவிகளாகும். ஆனால் பல ஆண்டுகளாக வங்கிகள் அரசின் குழந்தைகளாகக் கருதப்பட்டுப் பலப்படுத்தப்பட்டுள்ளன. உலக அளவில் பார்க்கும்பொழுது அதன் சூழ்நிலையே வேறு. அங்கு தனியார் வங்கிகளை, அரசு பிற தனியார் நிறுவனங்களைப் போலவே ஒழுங்குபடுத்திவருகிறது.
ரிசர்வ் வங்கி வட்டி விகிதக் குறைப்பில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. ஏற்கனவே செலவு செய்யப்பட்ட நிதியின் மீது கணக்கில் உள்ள நிதிக் கொள்கையைக் கொண்டு வட்டி விகிதம் முடிவுசெய்யப்பட்டு நிதி செயல் திட்டம் வழங்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி தன் உறுதியான நிலைபாட்டைக் கொண்டு தொடர்ந்து இரண்டு முறை வட்டியைக் குறைத்தபோதும் வங்கிகள் அதனை நினைவில் கொள்ளவில்லை. இந்த முறை இருப்பதிலேயே பெரிய வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, மற்றும் எச்டிஎஃப்சி ஆகியவை ஒரே நேரத்தில் வட்டி விகிதத்தைக் குறைத்து உள்ளன. அவை 0.15 முதல் 0.25 சதவிகிதம் வரை.
வங்கிகள் வெளிப்படையான வட்டிவிகிதத்தைக் காட்டுவது இதுவே முதல் முறை என நிதித் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஐசிஐசிஐ வங்கி வட்டிவிகிதத்தை அதிகபட்சமாக 0.25 குறைத்துள்ளது. இதனைப் போலவே அதிக அளவில் கடன் வழங்கும் பாரத ஸ்டேட் வங்கியும் வட்டிவிகிதத்தைக் குறைத்துள்ளது. இதனைச் சிறிய வங்கியான ஆக்ஸிஸ் வங்கியும் அமல்படுத்தி உள்ளது. பிற வங்கிகளான பரோடா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, மத்திய வங்கி, பாரத வங்கி ஆகியவையும் வட்டிவிகித மாற்றங்களை அறிவித்துள்ளன.
ரிசர்வ் வங்கியின், ஜனவரி 2015 அறிக்கையின் வழிகாட்டுதலின்படி வங்கிகள் மேலும் வெளிப்படையான வட்டிவிகிதத்தை இணையத்தில் வெளியிட வலியுறுத்தி உள்ளது. இதனால் கடன் பெற விரும்புவோர் வங்கிகளின் திட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்து கடன் பெற ஏதுவாக இருக்கும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement