Ad Code

Responsive Advertisement

அட்சய திரிதியை ரகசியம்

 சித்திரை மாதம் வளர்பிறை திரிதியை திதி = இது தான் அட்சய திரிதியை..

ஜோதிட ரீதியாக பாருங்கள்...

சித்திரை மாதம் சூரியன் உச்சம்..

அட்சய திரிதியை அன்று சந்திரனோ சூரியன் நின்ற பாகைக்கு சுமார் 24 degree to 36 degrees. அப்படிஎன்றால் சூரியன் நின்ற ராசிக்கு அடுத்த ராசியில் தான் சந்திரன் நிற்பார். சூரியன் உச்சமாகி மேஷத்தில் நின்றால்...சந்திரனோ ரிஷபத்தில் தான் நிற்பார்...ஆக, அட்சய திரிதியை அன்று சூரியனும் உச்சம்...சந்திரனும் உச்சம்...

இன்றைய நாளில் சூரியனின் வர்க்கமான தந்தையிடத்திலும், சந்திரனின் வர்க்கமான தாயாரிடத்திலும் ஆசி பெற வேண்டும்...அதிலும் "அட்சதை" பெற வேண்டும்...

அட்சதை என்றால்...உங்களுக்கு தெரியும் திருமண வீட்டிற்கு சென்றால், தாலி கட்டுவதற்கு முன்பு தட்டில் மஞ்சள், அரிசி, பூ போன்ற இத்தியாதிகளுடன் தாலியையும் சேர்த்து ஒருவர் ஒவ்வொருவரிடமும் காட்டி அந்த அட்சதையை எடுத்து அந்த தாலி மீதோ அல்லது மணமக்கள் மீதோ தூவி ஆசிர்வதிக்க வேண்டும். அவ்வளவு தான்...

நமது அப்பா அம்மாவிடம் தந்து அவர்கள் காலடியில் விழுந்து அவர்களிடம் இருந்து நாம் இது போன்ற அட்சதையை ஆசிர்வாதமாக பெற்று விட்டால், உலகத்தில் சூரியனால் ஆத்மசக்தியையும், சந்திரனால் பொன் பொருள் செல்வத்தையும் ஒருங்கே பெறமுடியும்.

தாய் தகப்பன் இல்லாதவர்கள் அவரவர்கள் குருவை வணங்கி அட்சதை பெறலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement