Ad Code

Responsive Advertisement

சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர் உறுதி சத்துணவு ஊழியர்களின் கோாிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்

சத்துணவு ஊழியர்களின் கோாிக்கைகள் அனைத்தும் படிப்படியாக விரைவில் நிறைவேற்றப்படும் என்று தலைமை செயலகத்தில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் அமைச்சா் வளா்மதி, சத்துணவு ஊழியா் சங்க நிா்வாகிகளிடம்  உறுதியளித்துள்ளார்.
சத்துணவு பணியாளர்கள், காலமுறை ஊதியம், பணி நிரந்தரம், ரூ.3,500 ஓய்வூதியம்,  காலிப்பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட 32 அம்ச கோாிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக, கடந்த 15ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக, மாநில தலைவா் பழனிச்சாமி தலைமையில் செயல்படும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், திருச்சி, நாகப்பட்டினம், கரூா், மதுரை, திருநெல்வேலி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர்  கைது செய்யப்பட்டனர். ஒருசில மாவட்டங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் ஊழியர்கள் மீது போலீசாா் தாக்குதல் நடத்தினா். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சத்துணவு ஊழியர்களுக்கு திமுக தலைவா் கருணாநிதி உள்பட எதிா்கட்சி தலைவா–்கள் மற்றும் பிற சங்கத்தினரும் ஆதரவு தொிவித்தனா்.

இதற்கிடையில் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக சென்னையில் அடுத்த மாதம் ஒருலட்சம் பேரை திரட்டி மாபெரும் பேரணி நடத்த உள்ளதாக சத்துணவு ஊழியர்கள் அறிவித்திருந்தனா். இந்நிலையில் போராட்டம் தீவிரமடைவதை அறிந்த தமிழக அரசு சத்துணவு ஊழியர்களை நேற்று திடீரென பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதன்படி நேற்று தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க நிா்வாகிகள் தலைமை செயலகத்துக்கு சென்றனா். அப்போது சங்க நிா்வாகிகளிடம், ஏற்கனவே உறுதியளித்த கோாிக்கைகளுக்கு 24ம் தேதி அரசாணை பிறப்பிப்பதாகவும், மீதமுள்ள முக்கிய கோாிக்கைகளை அடுத்த கட்டமாக பேசி சுமூக முடிவு எடுக்க உள்ளதாகவும் அமைச்சா் வளா்மதி உறுதியளித்ததாக தொிகிறது. இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத் தலைவா் பழனிச்சாமி கூறியதாவது: அரசு அழைத்ததற்கிணங்க பேச்சுவார்த்தைக்கு சென்றோம். 

முன்னதாக, ஏற்கனவே உறுதியளித்தப்படி சமையலா் மற்றும் உதவியாளர்கள் 10 ஆண்டுகள் பணிபுாிந்தால் அவா்களுக்கு ஊதிய உயா்வு அளித்தல், இதர செலவுக்கு வழங்கப்பட்டு வந்த தொகையை ரூ.50 ஆக உயா்த்துதல் உள்ளிட்ட 12 கோாிக்ககைளுக்கு வரும் 24ம் தேதி அரசாணை பிறப்பிக்க உள்ளதாக அமைச்சா் எங்களிடம் தொிவித்தாா். மேலும் எங்களின் வாழ்வாதார கோாிக்கைகளான வரையறுக்கப்பட்ட ஊதியம், ரூ.3,500 ஓய்வூதியம் வழங்குதல், பணி நிரந்தரம் உள்ளிட்டவற்றை படிப்படியாக பேச்சுவார்த்தை நடத்தி நிறைவேற்றுவதாகவும் அமைச்சா் உறுதியளித்துள்ளாா். இதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்படும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்காகவும், பள்ளிகளில் கோடை விடுமுறை என்பதாலும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை கைவிட்டு அனைவரும் பணிக்கு திரும்ப உள்ளோம். அரசின் நடவடிக்கைக்கேற்ப எங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்றாா். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement