Ad Code

Responsive Advertisement

'திறன் மேம்பாட்டுக்காக மாநிலம் தோறும் தனி பல்கலை'

''திறன் மேம்பாட்டுக்காக, அனைத்து மாநிலங்களிலும், தலா ஒரு பிரத்யேக பல்கலை உருவாக்கப்படும்,'' என, மத்திய அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்.மத்திய அரசின், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், மத்திய திறன் மேம்பாட்டுக் கழகம், இதற்கு அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து, ஒரு லட்சம் பேருக்கு, மருத்துவம் சார்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க உள்ளது.


96 சதவீதம் பேர்:மத்திய திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி, சென்னையில், பயிற்சித் திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:ஆஸ்திரேலியாவில், 65 சதவீதம் பேர்; ஜெர்மனியில், 74 சதவீதம் பேர்; ஜப்பானில், 80 சதவீதம் பேர்; தென் கொரியாவில், 96 சதவீதம் பேர் திறன் சார்ந்த பயிற்சி பெற்றவர்களாக உள்ளனர். இந்தியாவில், இது, 2 சதவீதமாக உள்ளது. நம் நாட்டில், 50 சதவீதம் இன்ஜினியர்களும்; நிர்வாகம் சார்ந்த படிப்புகளில், 70 சதவீதம் பேரும் வேலை இன்றி உள்ளனர். திறன் சார்ந்த பயிற்சி பெறாததே காரணம். 66 ஆண்டுகள், கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த நாம், இனி, திறன் மேம்பாட்டுக்கு தர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

நாட்டில், 12 கோடி பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி தர வேண்டும். இவர்களில், தானாக பணம் செலுத்தி பயிற்சி பெற முடியாத அளவில், 70 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களுக்கு பயிற்சி அளிக்க, 4.5 லட்சம் கோடி ரூபாய் தேவை. சரியானதாக இல்லை:இதுவரை, தொழிலாளர் துறையின் கீழ் இருந்த, 12 ஆயிரம், ஐ.டி.ஐ.,களை, இரண்டு நாட்களுக்கு முன், மத்திய அரசு, திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் மாற்றி உள்ளது. பள்ளிகளில் தரப்படும் பயிற்சி சரியானதாக இல்லை. திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக, அனைத்து மாநிலங்களிலும், தலா ஒரு பிரத்யேக பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement