என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு மாணவ–மாணவிகள் கண்ணியமாக உடை அணிந்து செல்லவேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரி கூறினார்.
இவர்களுக்கு உடை கட்டுப்பாடு குறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
கண்ணியமாக உடை அணிய வேண்டும்
உடை கட்டுப்பாடு மாணவ– மாணவிகளுக்கு மிக தேவையான ஒன்று. இதை அந்தந்த கல்லூரி டீன்கள் கண்காணித்து வருகிறார்கள். இதுவரை மாணவர்களின் ஆடை கட்டுப்பாடு குறை குறித்து புகார் எதுவும் வரவில்லை. மாணவ– மாணவிகள் கல்லூரிகளுக்கு கண்ணியமாக உடை அணிந்து செல்ல வேண்டும்.
மாணவராக இருந்தால் டி–சர்ட், பனியன் ஆடை அணியக்கூடாது. முழுக்கால் சட்டை, சட்டை அணிந்து வரலாம். மாணவிகள் ஜீன்ஸ் பேண்ட், டி.சர்ட், பனியன் ஆடை, கை இல்லாத ரவிக்கை ஆகியவை அணியக்கூடாது. மாறாக சேலை அணியலாம். சுரிதார் அணிந்து வரலாம். மொத்தத்தில் கண்ணியமாக உடை அணிந்து செல்ல வேண்டும். இப்படித்தான் பெரும்பாலான கல்லூரிகளில் நடைமுறையில் உள்ளது.
செல்போன் ‘சுவிட்ச் ஆப்’
செல்போன்கள் இன்றைய காலக்கட்டத்தில் அவசியம்தான். கல்லூரிகளுக்கு செல்போன் கொண்டு வரலாம். ஆனால் வகுப்புக்கு செல்லும் முன் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். வகுப்பு முடிந்த பின்னர் செல்போனை ஆன் செய்து கொள்ளலாம். உடைகளையும், செல்போன்களையும் டீன் மற்றும் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை