சமையல் எரிவாயு உருளை நேரடி மானியத் திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்கள், தேவையெனில் தங்கள் வங்கிக் கணக்கை மாற்றிக்கொள்ள முடியும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாடிக்கையாளர்கள் நேரடி மானியத் திட்டத்தில் இணைந்து மானியத் தொகை பெறுவதற்கு, ஆதார் அட்டை கட்டாயமில்லை. ஆனால், சமையல் எரிவாயு இணைப்பு உள்ள வாடிக்கையாளர் பெயரில் வங்கிக் கணக்கு இருப்பது அவசியம்.
தமிழகத்தைப் பொருத்தவரை 1.53 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன. இவற்றில் தற்போதைய நிலவரப்படி, சுமார் 1.32 கோடிக்கும் (86 சதவீதம்) அதிகமான வாடிக்கையாளர்கள் நேரடி மானியத் திட்டத்தில் இணைந்துள்ளனர்.
அவர்களது வங்கிக் கணக்கில் நேரடி மானியத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது.
இது தவிர, சுமார் 18 லட்சத்துக்கும் அதிகமானோர் இன்னும் இந்தத் திட்டத்தில் இணையாமல் உள்ளனர்.
எப்படி இணைவது?
ஆதார் அட்டை இல்லாதவர்கள் சமையல் எரிவாயு புத்தகத்தின் முதல் பக்க நகல் (அல்லது) அண்மையில் பெற்ற சமையல் எரிவாயு உருளை தொகைக்கான ரசீது, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் (ஐஊநஇ இர்க்ங் சர். உள்ளது) ஆகியவற்றை விண்ணப்ப படிவத்துடன் இணைத்துக் கொடுத்தால் போதுமானது.
ஆதார் அட்டை உள்ளவர்கள் எரிவாயு இணைப்பு யாருடைய பெயரில் இருக்கிறதோ அவரது ஆதார் அட்டையின் நகல், சமையல் எரிவாயு புத்தகத்தின் முதல் பக்க நகல் (அல்லது) அண்மையில் பெற்ற சமையல் எரிவாயு உருளைக்கான ரசீது, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை விண்ணப்ப படிவத்துடன் இணைத்துக் கொடுக்க வேண்டும்.
வங்கிக் கணக்கை மாற்றலாம்
நேரடி மானியத் திட்டத்தில் இணைவதற்காக வங்கியில் ஏற்கெனவே சேமிப்பு கணக்கு உள்ளவர்கள், ஊதியத்துக்காக வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்கள், பிரதமரின் மக்கள் நிதி (ஜன் தன்) திட்ட வங்கிக் கணக்கு உள்ளவர்கள் தங்களது வங்கிக் கணக்கு எண்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
ஊதியத்துக்காக வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாறும்போது வங்கிக் கணக்கை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இது தவிர, வங்கிக் கணக்கை முடித்துக்கொள்பவர்கள், வேறு வங்கிக்கு மாற நினைப்பவர்கள் நேரடி மானியத்துக்காக அளித்த வங்கிக் கணக்கை மாற்ற முடியுமா? என ஐயம் தெரிவித்தனர்.
ஆனால், வாடிக்கையாளர்கள் அனைவரும் தேவையெனில், தங்களது வங்கிக் கணக்கை மாற்றிக் கொள்ள முடியும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
எப்படி மாற்றுவது?
நேரடி மானியத் திட்ட வங்கிக் கணக்கை மாற்ற நினைக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் விநியோகஸ்தரிடம் சென்று, எந்த வங்கிக் கணக்கில் மானியத் தொகையை பெற வேண்டுமோ அந்த வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலை (ஐஊநஇ இர்க்ங் சர். உள்ளது) சமர்பித்து மாற்றிக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு முறை மட்டுமே அனுமதி
வங்கிக் கணக்கை மாற்ற நினைக்கும் வாடிக்கையாளர்களின் கோரிக்கையை விநியோகஸ்தர்களால் ஒரு முறை மட்டுமே நிறைவேற்ற முடியும்.
இரண்டாவது முறையாக வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கை மாற்ற நினைத்தால் சம்பந்தப்பட்ட எண்ணை நிறுவனங்களிடம் விண்ணப்பித்து, முறையான காரணங்கள் இருந்தால் மட்டுமே வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கு எண் மாற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை