Ad Code

Responsive Advertisement

கற்பித்தலில் புதுமை : தேவகோட்டை ஆசிரியர் தேர்வு

கற்பித்தலில் புதுமையை புகுத்திய தேவகோட்டை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தேர்வு பெற்றுள்ளார். மாநில கல்வியியல் ஆராய்ச்சி,பயிற்சி நிறுவனம், கற்பித்தலில் புதுமையை கையாண்ட ஆசிரியர்கள் 75 பேரை தேர்வு செய்துள்ளது. இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கமும் ஒருவர். ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறையை நேரில் பார்வையிட கல்வியியல் பயிற்சி நிறுவன கல்வி ஒளிபரப்பு நிகழ்ச்சிக்கான இயக்குநர் ஜெரோம் தலைமையிலான குழுவினர் இந்த பள்ளிக்கு வந்தனர்.

இயக்குநர் ஜெரோம் கூறுகையில்,"" தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை 5 லட்சம் ஆசிரியர்கள் பணி செய்கின்றனர். இவர்கள் பல விதமாக கற்பித்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த ஆண்டு 75 ஆசிரியர்களை தேர்வு செய்து,அவர்கள் கற்பித்தலில் கையாளும் புதுமைகளை ஒளி,ஒலி காட்சியாக படம் பிடித்து, பிற ஆசிரியர்களுக்கு இணையதளம் மூலம் கொண்டு செல்கிறோம். தொடர்ந்து இது போன்ற புதுமை குறித்து மற்றவர்களுக்கு காண்பிக்க உள்ளோம்,'' என்றார்.

தேர்வு பெற்ற தலைமையாசிரியர் சொக்கலிங்கம் கூறுகையில், "" இன்றைய கல்வி முறை அறைக்குள்ளேயே கற்று, மாணவர்களுக்கு போரடிக்கும் விதமாக உள்ளது. திருக்குறள், அபிராமி அந்தாதி, பாடல்களை நடனம் மற்றும் இசையோடு அதற்குரிய கலைஞர்கள் மூலம் பயிற்சியளித்தேன். பொம்மலாட்டம் மூலம் கற்பித்தோம். முக்கியமான இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று களப்பயிற்சிகளை அளிப்பதில் மாணவர்கள் எளிதில் தெரிந்து கொள்கிறார்கள். அதே போல் மாணவர்கள் படிக்க படிக்க பாடங்கள் சம்பந்தமாக வினாடி வினா போன்று நிகழ்ச்சிகளை ஆசிரியர்களின் துணையோடு நடத்தி வருகிறேன். ஆரம்பத்தில் இந்த முயற்சி பலனளித்ததால் தொடர்ந்து கேள்விப்படும் புதுமைகள் அனைத்து வழிகளையும் கற்பித்தலுக்கு பயன்படுத்துகிறேன்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement