Ad Code

Responsive Advertisement

கொத்து கொத்தாக போலி வாக்காளர்கள்: பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி - தேர்தல் கமிஷன் கடிதம்

வாக்காளர் பட்டியலில் போலிகள் அதிகமாக உள்ளதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த, கல்வி துறை அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியுள்ளது.

துறை அதிகாரிகள்:

தமிழக வாக்காளர் பட்டியலை, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் மூலம், சமீபத்தில் ஆய்வு செய்ததில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், ஏராளமான வாக்காளர்கள் தங்கள் பெயரை பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது; பெயர் குழப்பம், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் போன்ற பிழைகளும் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி அதிகாரிகளின் உதவியை, தேர்தல் கமிஷன் நாடியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் அரசுத் துறை ஊழியர்கள் மூலம், போலி வாக்காளர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, கல்வி துறை அதிகாரிகளுக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து, கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:

எச்சரிக்கை:

போலி பதிவால் ஏற்படும் சட்ட ரீதியான பின் விளைவுகள் குறித்து, வாக்காளரை எச்சரிக்கை செய்ய, கல்வி துறையை தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும் வரை கல்லூரி மாணவ, மாணவியரும், பள்ளிகள் திறந்த பின், ஜூலை வரை பள்ளி மாணவ, மாணவியரும் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement