பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்குவதற்கான பணியை இன்று தொடங்கி 17ம் தேதிக்குள் முடிக்கவும், மாணவர்களின் ரத்த பிரிவு கட்டாயம் தேவை என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், கோடை விடுமுறையிலேயே வழங்க ஏற்பாடு செய்யும்படி பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் வழிகாட்டுதல் கூட்டத்தை நடத்தி நடத்தி வந்தார். நேற்றுடன் அந்த கூட்டம் முடிந்தது. இதில் மாவட்ட வாரியாக முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், தொடக்க கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா கூறியதாவது: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும்போது அனைத்து மாணவ மாணவியர் கையிலும் அரசின் இலவச நலத்திட்ட பொருட்கள் இருக்க வேண்டும். மேலும், இலவச பஸ்பாஸ் வழங்குவது தொடர்பாக அனைத்து மாவட்டத்தை சேர்ந்த கல்வி அலுவலர்கள் எலக்ட்ரானிக் மானிட்டரிங் இன்பர்மேஷன் சிஸ்டத்தில் மாணவர்களின் விவரங்களை தொகுக்க வேண்டும். குறிப்பாக மாணவ மாணவியரின் ரத்த பிரிவு, வங்கிக் கணக்கு எண்களை சேர்க்க வேண்டும். அதன் மூலமே பஸ் பாஸ் வழங்க ஏற்பாடு செய்யப்படும். 13ம் தேதி (இன்று) முதல் இதற்கான பணிகளை தொடங்கி 17ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
ரத்த பிரிவு கட்டாயம் தேவை. ஆதார் அட்டை யில் உள்ள விவரங்ளையும் மேற்கண்ட தகவல் தொகுப்பில் சேர்க்க வேண்டும். ரத்த பிரிவு வழங்காதவர்களுக்கு பஸ் பாஸ் கிடைக்காது. அவர்களுக்கு பள்ளி திறந்த பிறகுதான் கிடைக்கும். இவ்வாறு சபீதா கூறியுள்ளார். ஒவ்வொரு மாணவரின் தகவல்களையும் பதிவுசெய்து ஆன்லைனில் அனுப்ப குறைந்தபட்சம் 15 நிமிடம் ஆகிறது. சில இடங்களில் மின்சாரம் இல்லை. சில இடங்களில் இணைய தளம் வேலை செய்யவில்லை என்ற பிரச்னை உள்ளது. ஒரே நேரத்தில் அனைத்து பள்ளியிலும் ஆன்லைன் மூலம் பதிவுசெய்வது முடியாது என்று பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை