Ad Code

Responsive Advertisement

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க புதிய முறை

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை எண் இணைப்பதற்கான ஐசிஆர் எனும் புதிய முறை இந்தியாவிலேயே முன் மாதிரியாக பொள்ளாச்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் பதிவு செய்யும் பணி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான தகவல்கள் பணியாளர்கள் மூலமாக கணினியில் பதிவு செய்யப்படுகிறது. இதற்குப் பதிலாக, இந்தியாவிலேயே முன் மாதிரியாக பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்கள் தகவல்களைப் பதிவு செய்ய ஐசிஆர் என்ற புதிய முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கென கொடுக்கப்படும் படிவத்தில் வாக்காளர் பெயர், முகவரி, செல்லிடப்பேசி எண், ஆதார் எண், வாக்காளர் எண் உள்ளிட்ட தகவல்களைப் பதிவு செய்து அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும். அந்தப் படிவம் ஸ்கேன் செய்யப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதன் மூலம் பிழை, காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். இதற்கான மென்பொருளை தமிழகத் தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ளது. இதனால், 1 மணி நேரத்தில் 1,000 படிவங்கள் வரை கணினியில் பதிவேற்றலாம்.

இதன்படி, பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் இந்தத் திட்டம் புதன்கிழமை முதல் செயல்படுத்தப்படுகிறது. முதல் நாளில் 700 பேரின் தகவல்கள் ஐசிஆர் முறையில் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

ஐசிஆர் செயல்படும் முறையை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டார். பொள்ளாச்சி சார்-ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே, நேர்முக உதவியாளர் சுமகுமாரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement