Ad Code

Responsive Advertisement

கணிதத்தில் 6 மதிப்பெண்: தேர்வுத்துறை கொடுக்குமா?

'பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில், குழப்பமாக இடம்பெற்ற வினாக்களுக்கு, ஆறு மதிப்பெண் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, மதுரை மாவட்டச் செயலர் முருகன் கூறியதாவது: கணிதத் தேர்வில், ஒரு மதிப்பெண் பகுதியில் இடம்பெற்ற, 15வது வினா, தமிழில் ஒரு அர்த்தத்திலும், ஆங்கிலத்தில் வேறு அர்த்தம் பெறும் வகையிலும் கேட்கப்பட்டது. மேலும், ஐந்து மதிப்பெண் பகுதியில், 38வது வினா, 'புளூபிரின்ட்' அடிப்படையில் இடம் பெறவில்லை. பாடப் பகுதியில் இல்லாத, 'சாய்சதுரம்' பகுதியில் இருந்து கேட்கப்பட்டது. அதே வினா, ஆங்கிலத்தில் குழப்பமாக கேட்கப்பட்டது. எனவே, இந்த இரண்டு வினாக்களுக்கும், விடையளிக்க முயற்சித்த மாணவர்களுக்கு, ஆறு மதிப்பெண் வழங்க வேண்டும். சங்கம் சார்பில் இந்த கோரிக்கையை, தேர்வுத்துறை இயக்குனரிடம் வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement