Ad Code

Responsive Advertisement

'டான்செட்' விண்ணப்பிக்க ஏப்.25, வரை கால நீட்டிப்பு

'டான்செட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும், 25 ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் உடனுக்குடன், 'ஹால்டிக்கெட்' பெற்றுச்செல்ல அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதுகலை இன்ஜி., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆகிய படிப்புகளுக்கு, பொது நுழைவுத் தேர்வான 'டான்செட்' கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு மே, ௧௬, ௧௭ம் தேதிகளில் 'டான்செட்' தேர்வு நடக்கிறது.

இதற்கான விண்ணப்பங்கள், தடாகம் ரோட்டிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில், கடந்த, ௧ம் தேதி முதல் காலை, ௯:௩௦ மணி முதல் மாலை, ௫:௩௦ மணி வரை வழங்கப்பட்டு வருகிறது.
வரும், ௨0 ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்களின் நலன்கருதி வரும், ௨5ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணமாக, பொதுப் பிரிவினர், ௫௦௦ ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், ௧௦, பிளஸ் ௨ மதிப்பெண் சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் நகலுடன், ௨௫௦ ரூபாய் செலுத்தி விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், www.annauniv.edu/tancet2015 எனும் இணையதளத்தில், 'ஆன் லைன்' மூலமும் இவ்வாண்டு விண்ணப்பிக்கலாம் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது; ஞாயிற்றுக்கிழமைகளில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'டான்செட்' விண்ணப்ப வினியோக பொறுப்பாளர் பேராசிரியர் குமார் கூறுகையில்,''டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும், 25ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து வழங்கியவுடன், உடனுக்குடன் சரிபார்க்கப்பட்டு புகைப்படத்துடன்கூடிய ஹால்டிக்கெட் பெற்றுச்செல்லலாம். 'ஆன் லைன்' முறையில் விண்ணப்பிப்பவர்களுக்கு, பல்கலையிலிருந்து ஹால்டிக்கெட் அனுப்பிவைக்கப்படும்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement