Ad Code

Responsive Advertisement

2004-ல் சுனாமியால் பாதித்த பள்ளி: 2015-ல் தமிழகத்தின் முதல் ஸ்மார்ட் பள்ளியானது

இப்போது நினைத்துப் பார்த்தாலும் ஈரக்குலையை நடுங்கச் செய்யும் கொடூர தினம் 2004, டிசம்பர் 26. அன்று தமிழகத்தையே புரட்டிப்போட்ட சுனாமிக்கு 80 மாணவர்களை பலி கொடுத்த பள்ளி தான் இப்போது தமிழ்நாட்டின் முதல் ஸ்மார்ட் பள்ளியாக கம்பீரமாக உருமாறியுள்ளது.

நாகை மாவட்டம் கீச்சங்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தான் இந்தப் பெருமையை பெற்றுள்ளது. நேற்று அங்கு நடந்த விழாவில் இந்த ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தை மாநில மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இது தமிழ்நாட்டின் முதல் ஸ்மார்ட் பள்ளி என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்த பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளிலும் எல்.சி.டி. ப்ரொஜெக்டர்களும், இண்டர்நெட் இணைப்பும் உள்ளது. 1-ம் வகுப்பிலிருந்து 4-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செயல்வழிக் கற்றல் முறையிலும், 4-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் எளிமையான கற்றல் முறையிலும் பாடங்கள் கற்பிக்கப்படும். இந்த வகுப்புகள் அனைத்தும் 100 சதவீதம் கணினி மயமாக்கப்பட்டது.

இதற்காக அப்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்குச் செலவான 7.5 லட்ச ரூபாயில், தமிழக அரசு 5 லட்சம் கொடுத்துள்ள நிலையில் உள்ளூர் மக்கள் ஒன்றிணைந்து 2.5 லட்ச ரூபாய் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement