Ad Code

Responsive Advertisement

அரசு தொழில்நுட்ப கல்லூரிகளில் நேரடியாக 2ம் ஆண்டில் சேர விண்ணப்பங்கள் :மே 4 முதல் விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் 41 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயப்படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். 

அதேபோல, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சென்னை தரமணியல் உள்ள மைய பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் நடத்தப்படும் இரண்டரையாண்டு செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கியல் பட்டயப்படிப்பிற்கான முதலாமாண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவிகள் தரமணியில் உள்ள டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் நடத்தப்படும் 1 வருட ஒப்பனை கலை பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். 

இதற்காக மாணவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் விண்ணப்பங்களை அடுத்த மாதம் 4ம் தேதி முதல் நேரில் பெற்று கொள்ளலாம். மேலும் விண்ணப்ப படிவங்களை  www.tndte.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கி கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.150. எஸ்சி, எஸ்டியினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறிப்பிட்ட கல்லூரிகளுக்கு அடுத்த மாதம் 22ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement