Ad Code

Responsive Advertisement

12 அம்ச கோரிக்கைகளை ஏற்று விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும் என உத்தரவாதம் அளித்தும் சத்துணவு ஊழியர் போராட்டம் தேவையற்றது - சங்கத்தலைவர்

12 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்று கொண்ட பின் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் தேவையற்றது,” என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் தெரிவித்தார்.

தேனியில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் உயர்நிலை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மாநில தலைவர் சண்முகராஜன் கூறியதாவது: அரசு ஊழியர்களின் 50 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மே 4 ல் தமிழக முதல்வர், தலைமைச்செயலரிடம் மனுக்கொடுக்க உள்ளோம். பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றால் தொடர் நடவடிக்கையில் ஈடுபடுவோம்.

சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்தவுடன் சமூக நலத்துறை அமைச்சர், உயர்கல்வி துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினர். 12 அம்ச கோரிக்கைகளை ஏற்று விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் சத்துணவு ஊழியர்களின் இந்த போராட்டம் தேவையற்றது,' என்றார். மாநில துணைத்தலைவர் மணிமோகன், பொதுச்செயலாளர் தேவேந்திரன், மாவட்ட தலைவர் சுருளியப்பன், மாவட்ட செயலாளர் சரவணன் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement