Ad Code

Responsive Advertisement

ஆம்பூரில் 10ம் வகுப்பு தேர்வு மைய கண்காணிப்பாளராக பி.எட் மாணவர்களை அனுப்பியதாக புகார்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் 10ம் வகுப்பு தேர்வு மையத்துக்கு மாணவர்களையே சூப்பர்வைசராக தனியார் பள்ளி நிர்வாகம் அனுப்பியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிளஸ் 2 தேர்வு கணித வினாத்தாளை வாட்ஸ் அப்பில் வெளியிட்ட விவகாரத்தின் பரபரப்பு இன்னும் முடியவில்லை. இந்நிலையில் பயிற்சி கல்லூரி (பிஎட்) மாணவர்களை ஒரு தனியார் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் என்று கூறி போலி ஆவணங்களுடன் தங்களது பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதும் மையங்களுக்கு சூப்பர்வைசராக அனுப்பியிருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வித்யாவிகார் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், ஆம்பூரில் உள்ள அரசு உதவிபெறும் கான்கார்டியா மற்றும் டிஏடபிள்யூ மேல்நிலை பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்வு எழுதி வருகின்றனர். இந்த நிறுவனம் அதேபகுதியில் கல்வியியல் கல்லூரியும் நடத்துகிறது.
இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 4 பேரை, வித்யாவிகார் பள்ளி ஆசிரியர்கள் என்று கூறி, கான்கார்டியா மற்றும் டிஎடபிள்யு தேர்வு மையங்களுக்கு கண்காணிப்பாளர் பணி கு அனுப்பி வைத்துள்ளனர். இதை கடந்த 30ம் தேதி நடைபெற்ற கணித தேர்வின்போது மற்ற ஆசிரியர்கள் கண்டுபிடித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். இதில், சூப்பர்வைசர்களாக தில்லைநாதன், பவித்ரா, வெங்கடேசன், கோகுல் ஆகியோர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் ஆசிரியர்கள் மத்தியில் நேற்று பிற்பகலில் இருந்து மெல்ல கசிய ஆரம்பித்துள்ளது. இதையடுத்து உஷாரான கல்வித்துறை அதிகாரிகள் தேர்வு அறைக்கு மாணவர்களை பள்ளி நிர்வாகம் அனுப்பியது குறித்து வாய்மொழியாக வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு துணைசூப்பிரண்டிடம் புகார் தெரிவித்துள்ளனர்.  
இதுகுறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குமாரிடம் கேட்டபோது, இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்படி எதுவும் நடக்கவில் லை. இதுகுறித்து போலீசில் எதுவும் புகார் அளிக்கவில்லைÕ என்றார்.  

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement