Ad Code

Responsive Advertisement

10ம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் விடையில் குழப்பம்

பத்தாம் வகுப்பு, ஆங்கிலம் முதல் தாளில், இரண்டு கேள்விகளில் குழப்பமான பதில் கொடுத்துள்ளதால், கருணை மதிப்பெண் வழங்கக் கோரிக்கை எழுந்துள்ளது.

பத்தாம் வகுப்பு, ஆங்கிலம் முதல் தாளில், ஐந்து மதிப்பெண்ணுக்கான, முதல் கேள்வியில், இரண்டு விடைகள் குழப்பமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது.இக்கேள்வியில், 'தாஜ்மகால்' குறித்து, ஒரு பத்தி கொடுக்கப்பட்டு, அதில் உள்ள, ஐந்து வார்த்தைகளுக்கு இணையான, ஆங்கில சொற்களை தேர்வு செய்ய குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்த்தைக்கும், நான்கு விடைகள் தரப்பட்டு, அதில் சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும்.அந்த வகையில், ' 'glory' என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான, நான்கு வார்த்தைகளில், இரண்டு பொருத்தமான வார்த்தைகள் தரப்பட்டுள்ளன. அதாவது, ''beauty,splendour ' என்ற அந்த, இரண்டு சொற்களில், இரண்டுமே, கிட்டத்தட்ட சரியான விடையே என, ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, இரு வார்த்தைகளில் எதை எழுதினாலும், மதிப்பெண் தர வேண்டும் என்று, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதேபோல்,'jostled' என்ற வார்த்தைக்கு இணையான சொல் பட்டியலில், ''pushed roughly,quarrelled ' ஆகிய, இரண்டு சரியான சொற்கள் இடம் பெற்றுள்ளன. இதில் சரியான விடையாக, 'pushed roughly' என்றாலும், பள்ளிக்கல்வித் துறை வழங்கிய வினா வங்கியில்,'quarrelled' என்ற வார்த்தையே விடையாக தரப்பட்டுள்ளது. அதனால், இதிலும், இரண்டில் எந்த விடை எழுதினாலும் அதற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement