Ad Code

Responsive Advertisement

அசர வைத்த சின்னமுத்தூர் அரசுப்பள்ளி ! - Karunai Doss

 திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஒன்றியம் , சின்னமுத்தூர் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா 23.03.205 அன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக நானும், சென்னையிலிருந்து உமா மகேஸ்வரி அவர்களும் சென்று விழாவில் கலந்து கொண்டோம். அண்டைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர்களும் மாணாக்கர்களும் கலந்து கொண்டனர். இலக்கியமன்ற விழா ஏற்பாடுகளை அள்ளி ஆசிரியர்களும் தலைமையாசிரியை கிருஷ்ணவேணி அவர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சியானது மதியம் 2 மணி வரை மாணவர்களின் பன்முகத் திறன் கண்டு வியந்து நின்றோம். 70 மாணவர்கள் கொண்ட குழுவில் ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு திறனை எடுத்தியம்பிய விதம் வியக்க வைத்தது. தமிழ் மீது ஆர்வத்தினை எனக்கு மேலும் அப்பள்ளி மாணவர்கள் ஊட்டினர். தமிழ் மொழியினை ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு அவர்களிடம் இருந்து பல தகவலினை நான் அறிந்து கொண்டேன். கல்லூரியில் மூன்று வருடம் சென்று படிக்க வேண்டிய அனைத்தையும் மூன்று மணித் துளிகளில் நான் அறிந்து கொண்டது போல உணர்ந்தேன். சரி அப்படி என்ன திறன் அவர்களிடம் இருந்தது என்பதை நான் விளக்குகிறேன்.

இலக்கியமன்ற விழாவின் சிறப்புகள் !

கடவுளுக்கு பால் பருப்பு அனைத்தையும் படைத்து விட்டு சங்கத் தமிழ் மூன்றையும் கேட்ட தமிழனது படைப்புகளை அனைத்து மாணவர்களும் தொகுத்தளித்தனர்.

முதலாம் வகுப்பு மாணவ மாணவிகள் முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் வரை அனைத்து மாணவர்களையும் இலக்கிய விழாவில் பங்கு பெற வைத்தது மிக சிறப்பாக இருந்ததது.

பாரதியார் பாடல் (கன்னிகா ) முதல் பட்டினத்தார் பாடல்கள் ( கலையரசி மூன்றாம் வகுப்பு) வரை மாணவ மாணவிகள் பாடிய விதம் மிக அருமையாக இருந்த்தது.

சிற்றிலக்கியங்கள் ( வீ.சங்கீதா இரண்டாம் வகுப்பு) முதல் எட்டுத்தொகை நூல்களையும் (கிஷோர் முதல் வகுப்பு ) எடுத்தியம்பிய விதம் சிறப்பாக இருந்தது.

நாயன்மார்கள் எத்தனை பேர் என வினவிய வினாவிற்கு 63 நாயன்மார்களையும்( பிரேம் மூன்றாம் வகுப்பு) அவர்களின் கதைகளையும் கூறியது மிகச் சிறப்ப்பாக இருந்தது.

பூக்கள் பற்றி கேட்டதற்கு 99 பூக்களையும் சிறிய பூக்களாக இருந்த மாணவி ( எம். காயத்ரி ஆறாம் வகுப்பு ) எடுத்தியம்பிய விதம் மிகச்சிறப்பு.

கவிஞர் மேத்தா கவிதை (ரம்யா முதல் வகுப்பு) , வைரமுத்துவின் கவிதை ( சுபிதா நான்காம் வகுப்பு) என கவிதைகளை முக பாவனையுடன் நல்ல குரல் வளத்துடன் ஏற்றத் தாழ்வுடன் காது குளிர மாணவிகள் கூறியது மிக அருமை.

புறநாநூற்றுப் பாடலினை ( சபீனா எட்டாம் வகுப்பு) நாடகம் மூலம் நடித்துக் காட்டி அனைத்து ஆசிரியர்களையும் வியப்பில் ஆழ்த்திய எட்டாம் வகுப்பு மாணவியின் நாடகம் சிறப்பு.

வில்லுப் பாட்டின் மூலம் தமிழின் சிறப்பினை சிறப்பித்த
நான்காம் வகுப்பு மாணாவர்களின் ( சஞ்வீவி ராம், கிருஷ்ணகுமாரி, பத்ரிநாத், மனோஜ், கார்த்திகா)திறனை எவ்வாறு வியப்பது.

கல்வியா? செல்வமா? ( பத்ரிநாத், சிவசெல்வம் நான்காம் வகுப்பு) என நான்காம் வகுப்பு மாணவர்களின் விவாதம் அருமையாக இருந்தது.

முரசு மூலம் முரசு பாடல்களைச் சிறப்பாகப் பாடிய மாணவியின் ( லோகேஷ்வரி ஆறாம் வகுப்பு) விதம் சிறப்பு.

ஒன்று முதல் பத்து வரை தமிழில் உள்ள சிறப்பான விசயங்களை விளக்கிக் கூறினர். எடுத்துக்காட்டாக ஐந்து என்று கூறினால் ஐவகை இலக்கணம், ஐவகை நிலங்கள், ஐம்பொறிகள் என ஒவ்வொன்றிற்கும் பல எடுத்துக் காட்டுடன் கூறினர்.

தமிழ் எழுத்துகளின் சிறப்புக்கள், ஓரெழுத்துச் சொற்கள் , தழிழ் ஆண்டுகளின் பெயர்கள், என ஓவ்வொரு மாணக்கரும் தங்களுக்குரிய திறனை வெளிப்படுத்தினர்.

ஐந்து நிமிடங்களில் ஐநூறு சொற்களை தமிழில் கணினியில் தட்டச்சு செய்யும் மாணவர்களையும் கண்டு வியந்தோம்.

தழிழின் பெருமையினை பவர்பாயிண்ட் பிரசெண்டேசன் மூலம் விளக்கிய விதம் மிக அருமை.

புதிய ஆத்திசூடி 110 ஐயும் இரண்டாம் வகுப்பு மீரா,கொன்றை வேந்தன் சுபிக்ஷா இரண்டாம் வகுப்பு மாணவி விளக்கிய விதம் சிறப்பு.

இன்னும் பல…. அவற்றில் நான் கூறியதோ சில …………………….

மதிய உணவு அருந்த கூட மனமில்லாமல் மாணவர்கள் செவிக்கு அளித்த விருந்து இருந்தது.

சிறந்த முத்தான மாணவர்களைச் சின்னமுத்தூர் பள்ளி உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

சிறப்பு விருந்தினரக வருகை புரிந்த ஈரோடுகதிர் அவர்களின் சமூக அக்கறை கொண்ட பேச்சும் அனைவரையும் கவர்ந்தது.

இத்தனை ஏற்பாடுகளையும் தலைமை தாங்கி சிறப்புற நடத்திய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாரியையை கிருஷ்ணவேணி அவர்களைப் பாராட்ட வார்த்தை இல்லை. தலைமை ஆசிரியருக்கு பக்கபலமாக இருக்கும் ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுக்கள். பள்ளியின் வளர்ச்சிக்கு பக்கபலமாக உள்ள பெற்றோர் ஆசிரியர் குழுத்தலைவர் அவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருந்தது. பல பள்ளி ஆசிரியர்களையும் தலைமயாசிரியர்கள், கல்வி அதிகாரிகளையும் விழாவினைச் சிறப்புற நடத்திய பள்ளித் தலைமையாசிரியை அவர்களுக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இவ்விழவிற்கு என்னை அழைத்துச் சிறப்பு செய்தமைக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement