Ad Code

Responsive Advertisement

காணாமல் போனவர்களை கண்டறிய இணைய தளம் - தமிழகக் காவல்துறை அறிவிப்பு

தமிழகத்தில் காணாமல் போனவர்களைக் கண்டறியும் வகையில் இணையதள சேவையை காவல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழகக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

பொதுமக்கள், தங்களது உறவினர்கள் அல்லது தெரிந்த நபர்கள் காணாமல் போனால் அது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் செய்தால், வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளில் காணாமல் போன நபர்களின் விவரங்கள் மற்றும் அடையாளம் தெரியாத இறந்தவர்களின் விவரங்கள், காவல்துறையின் அந்தந்த மாநகர காவல் ஆணையரகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்கள், காவல்துறை இணைய தளங்களில் வெளியிடப்படுகின்றன.

ஆகவே, காணாமல் போன தங்களது உறவினர்கள், தெரிந்த நபர்களின் விவரங்களை எளிதில் தெரிந்துக் கொள்ள, www.tnpolice.org, www.ncrb.gov.in,  www.trackthemissingchild.gov.in, www.eservices.tnpolice.gov.in ஆகிய இணைய தளங்களைப் பார்க்கலாம். இதன் மூலம் பொதுமக்கள், காணாமல் போகிறவர்களை பற்றியத் தகவல்களை போலீஸôரிடம் இருந்து இந்த இணையத்தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement