Ad Code

Responsive Advertisement

தொலைதூர கல்வி: பொறியியல் படிப்பிற்கு யுஜிசி தடை

தொலைதூர கல்வி மூலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் நடத்துவதற்கு யுஜிசி தடை விதித்துள்ளது. இது தொடர்பாக பல்கலை மானியக்குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தொலைதூர கவுன்சில்(டெக்) அமைப்பின் பணிகள் யுஜிசி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்து தொலை தூர கல்வி திட்டத்தில் வழங்கப்படும் படிப்புகளை ஒழுங்கு படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக எந்த ஒரு பல்கலைகழகம், மற்றும், நிகர்நிலை பல்கலைகழகம், எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளை தவிர தொலைதூர கல்வி திட்டத்தில் பிற தொழி்ல் நுட்ப பாடங்கள் மற்றும் பட்டய படிப்புகளை நடத்த கூடாது. மீறினால் யுஜிசி அல்லது ஏஐசிடிஇ நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement