Ad Code

Responsive Advertisement

"கற்றல் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி தேவை'

கற்றல் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு வழி கற்றல் முறை அவசியம் என்று இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டி.முத்துசாமி தெரிவித்தார்.

கற்றல் திறன் குறைபாடு (டிஸ்லெக்சியா) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் டி.முத்துச்சாமி பேசியதாவது:

பள்ளியில் பயிலும் மாணவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் வரை கற்றல் திறன் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கற்றல் திறன் குறைபாடு உள்ள குழந்தைகள் எழுவது, படிப்பது, உச்சரிப்பதற்கு சிரமப்படுகின்றனர். எனவே, அவர்களுக்கு சிறப்பு வழி கற்றல் என்பது அவசியமாகிறது.

இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகளை 3 முதல் 4 வயதுக்குள்ளேயே கண்டறியலாம். கற்றல் திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய கல்விச் சோதனைகள் செய்து, அவர்களின் குறைபாட்டின் தீவிரத்தை கண்டறிய வேண்டும்.

அதன் மூலம் அவர்களுக்குத் தகுந்தவாறு கல்வி அளித்து திறமையானவர்களாக மாற்ற முடியும்.

இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவர்களிடமும், மக்களிடமும் போதிய விழிப்புணர்வு இல்லை என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement