Ad Code

Responsive Advertisement

பள்ளிகளில் தமிழ் பாடம் கட்டாயம்: முதல் வகுப்பு தமிழ் பாடநூல் தயார்

நடப்பு கல்வியாண்டில், அனைத்து பள்ளிகளும், கட்டாயமாக தமிழ் மொழி பாடம் கற்றலை, முதல் வகுப்பில், நடைமுறைப்படுத்த வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.

'பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன' என, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அறிவித்துள்ளது. அனைத்து பள்ளிகளிலும், 2015-16ம் கல்வியாண்டில் இருந்து, முதல் வகுப்பில் தொடங்கி, படிப்படியாக தமிழ் கற்பிக்கப்படுதல் வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 2015-16ல், பல வாரியங்களை சேர்ந்த, அனைத்து பள்ளிகளும், கட்டாயமாக, தமிழ் மொழி பாடம் கற்றலை, முதல் வகுப்பில், நடைமுறைப்படுத்த வேண்டும். முதல் வகுப்பிற்கான, தமிழ் பாடநூல்கள் அச்சிடப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின், சென்னை மற்றும் மதுரை வட்டார அலுவலகத்தில், விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், சென்னை வட்டார அலுவலகத்தில், புத்தகங்கள் வாங்கலாம். மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், மதுரை வட்டார அலுவலகத்தில், பாடப்புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம். முதல் வகுப்பு தமிழ் பாடநூல் விலை, 60 ரூபாய்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement