ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற தங்களுக்கு உடனடியாக பணி நியமன உத்தரவை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் நடத்திய தொடர் போராட்டம் புதன்கிழமை முடிவுக்கு வந்தது.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக ஆசிரியர் பணி நியமனத்துக்கான உத்தரவை வழங்க வேண்டுமென பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் 10-ஆவது நாளாக புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைமைச் செயலகத்தில்... தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, தலைமைச் செயலகம் எதிரே பார்வையற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரிகள் இரண்டு பேர் தீக்குளிக்க முயற்சித்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதன் பிறகு, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுடன் தமிழக அரசின் சார்பில் சமூகநலம்-மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் 9 அம்சக் கோரிக்கைகளில் 4 அம்ச கோரிக்கைகளை அரசுத் தரப்பில் ஏற்பதாக உறுதி அளிக்கப்பட்டது.
தனியார் கல்லூரி, பள்ளிகளில் வேலைக்கு உத்தரவாதம், வேலையில்லாத பார்வையற்ற பட்டதாரிகளுக்கு உதவித் தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்பதாக அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சென்னையிலும், திருச்சியிலும் கடந்த 10 நாள்களாக நடத்தி வந்த போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக பார்வையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.
அனைத்து மாற்றுத் திறனாளி ஆசிரியர் போராட்டம்: பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், அனைத்து மாற்றுத் திறனாளிகள் ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடனும் அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை எனவும், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற தங்களுக்கு உடனடியாக பணி நியமன உத்தரவை வழங்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், தங்களின் போராட்டம் தொடர்வதாக ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்
gbcb.jpg)
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை