சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவன முதுநிலை பட்ட, பட்டயப் படிப்புகளுக்கான 2014 டிசம்பர் மாதத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (மார்ச் 11) வெளியிடப்பட உள்ளன.பல்கலைக்கழகத்தின் www.ideunom.ac.in, www.unom.ac.in ஆகிய இணையதளங்களில் இரவு 8 மணி முதல் தேர்வு முடிவுகளை பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
பதிவு எண் ஏ13, சி13 ஆகியவற்றில் ஆரம்பிக்கும் மாணவர்கள் மட்டும், தேர்வுத் தாள் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தாள் ஒன்றுக்கு ரூ. 750 கட்டணம் செலுத்த வேண்டும்.மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கத் தகுதியில்லாத மாணவர்கள், மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு தாள் ஒன்றுக்கு ரூ. 200 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு வருகிற 18-ஆம் தேதிக்குள் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை