Ad Code

Responsive Advertisement

சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி - எம்.பி.ஏ., எம்.சி.ஏ. தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவன எம்.பி.ஏ. எம்.சி.ஏ., எம்.எஸ்சி. தகவல் தொழில்நுட்ப படிப்புகளுக்கான 2014 டிசம்பர் மாதத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை(மார்ச்.18) வெளியிடப்பட உள்ளது.பல்கலைக்கழகத்தின் www.ideunom.ac.in, www.unom.ac.in  ஆகிய இணையதளங்களில் இரவு 8 மணி முதல் தேர்வு முடிவுகளைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், தேர்வு மறு மதிப்பீடுக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதற்கு தாள் ஒன்றுக்கு ரூ. 750 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பல்கலைக்கழக இணையதளம் மூலம் வருகிற 25-ஆம் தேதிக்குள் ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement