Ad Code

Responsive Advertisement

வயது வரம்பில் அதிகாரிகளுக்கு சலுகை

மாநில அரசுகளில் பணியாற்றும் மூத்த அதிகாரிகளை, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பணிகளில் சேர்த்து கொள்வதற்கான, அதிகபட்ச வயது வரம்பு, 56 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது; இந்த நடைமுறை, இந்தாண்டு முதல் அமலுக்கு வருகிறது.
மாநில அரசுகளில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள், அனுபவம், செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., பணிகளில் சேர்த்து கொள்ளப்படுவது வழக்கம். இதற்கான அதிகபட்ச வயது வரம்பு, 54 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. மாநில அரசுகளில் பணிஆற்றும் சில அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில், 'மத்திய அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநில அரசுகளின் கீழ் பணியாற்றி வரும் அதிகாரிகளை, ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ப்பதற்கான வயது வரம்பையும் அதிகரிக்க வேண்டும்' என, வலியுறுத்தி இருந்தனர். இதுகுறித்து, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய பணியாளர் நல அமைச்சகம் ஆகியவை ஆய்வு செய்து, மாநில அரசு அதிகாரிகளை சேர்த்து கொள்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை, 56 ஆக அதிகரிப்பதாக அறிவித்தன. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement