Ad Code

Responsive Advertisement

8.4 லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் பிளஸ்2 தேர்வு இன்று ஆரம்பம் - காப்பி அடிப்பதை தடுக்க தயார் நிலையில் 4000 பறக்கும்படை

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. 8 லட்சத்து 43 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தமிழகம், புதுச்சேரியில் 6,256 பள்ளிகள் மூலம் 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவர்களும், தனித் தேர்வர்களாக 42 ஆயிரத்து 963 பேரும் எழுதுகின்றனர். இதற்காக, தமிழகம், புதுச்சேரியில் 2,377 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக 16,947 மாணவர்கள் எழுதுகின்றனர். 

புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் 77 கைதிகள் தேர்வு எழுதுகின்றனர். டிஸ்லெக்சியாக, பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் இதர உடல் ஊனமுற்றோர் சொல்வதை எழுதும் எழுத்தர் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மொழிப்பாடத்தை அவர்கள் எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு கூடுதலாக ஒரு மணி நேரமும் வழங்கப்பட்டுள்ளது. 

கேள்வித்தாள் வைக்கப்பட்டுள்ள காப்பீட்டு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் காவலுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் கண்காணிப்பாளர் ஆகியோரால் குழு ஏற்படுத்தப்பட்டு கூடுதல் கண்காணிப்பு ஏற்படுத்தப்பட் டுள்ளது. தேர்வு மையங்களில் மின்தடையை சமாளிக்க ஜெனரேட்டர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 4,000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. கேள்வித்தாளை படித்துப் பார்க்க 10 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம். 10.15 மணிக்கு விடை எழுத தொடங்க வேண்டும். மதியம் 1.15 மணிக்கு முடிக்க வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்கள் துண்டுச் சீட்டு வைத்திருத்தல், பார்த்து எழுதுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டால் 2 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை தேர்வு எழுத முடியாது. இதுதவிர, ஆள்மாறாட்டத்தை தடுக்க மாணவர்களுக்கு போட்டோவுடன் கூடிய ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் அவசியம் கொண்டு வர வேண்டும். தேர்வு அறையில் ஹால்டிக்கெட்களை ஒப்பிட்டு பார்த்து மாணவர்கள் வருகைப் பதிவை பதிவு செய்வார்கள் என்பதால் ஹால்டிக்கெட் அவசியம். தேர்வு தொடங்குவதற்கு முன்பாக மாணவர்கள் முன்னிலையில் கேள்வித்தாள் கட்டுகள் பிரிக்கப்படும். அப்போது, மாணவர்களிடம் கையெழுத்து பெறுவார்கள். 

தேர்வு பதற்றத்தை தவிர்க்க ஒரு மணி நேரம் முன்னதாகவே தேர்வு மைய வளாகத்தில் மாணவர்கள் சென்றுவிடுவது நல்லது. கால தாமதத்தை தவிர்க்க தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு கூடுதல் பஸ்களை இயக்கவும் பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. சென்னை மாவட்டத்தில் 412 பள்ளிகள் மூலம் 24 ஆயிரத்து 653 மாணவர்களும், 28 ஆயிரத்து 750 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக, சென்னை மாவட்டத்தில் 144 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

தேர்வுக்கட்டுப்பாட்டு அறை : தேர்வுத்துறை புதிய ஏற்பாடு
எந்த ஆண்டும் இல்லாத வகையில் மாணவர்கள் வசதிக்காக, இந்த ஆண்டு பொதுத் தேர்வுக்காக முழு நேர தேர்வுக் கட்டுப்பாட்டு அறையை தேர்வுத்துறை தொடங்கியுள்ளது. இன்று தொடங்கி நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்வுகள் மற்றும் 19ம் தேதி முதல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடர்பாக பொதுமக்கள், மாணவர்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக தேர்வுக் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேர தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும்.

புகார் அளிக்கதொலைபேசி எண்கள்
பொதுமக்கள், மாணவர்கள் தங்sளது புகார்கள் மற்றும் கருத்துகளை, அரசுத் தேர்வுகள் துறை கட்டுப்பாட்டு அறையின் 80125 94101, 80125 94116, 80125 94120, 80125 94125 தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement