Ad Code

Responsive Advertisement

பிளஸ்2 தனித்தேர்வர்கள் கவனத்திற்கு...

பிளஸ்2 தனித்தேர்வர்கள் கருத்தியல் தேர்வு எழுதும் மையங்களிலேயே செய்முறைத் தேர்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செவ்வாய்கிழமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 5-ம் தேதி முதல் நடைபெற்று வரும் பிளஸ்2 பொதுத்தேர்வில் தனித்தேர்வர்களும் பங்கேற்று தேர்வு எழுதுகின்றனர். இதில், செய்முறை தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தாங்கள் கருத்தியல் தேர்வு எழுதும் மையங்களிலேயே 12,14,17,19 ஆகிய நாள்களில் நடைபெற இருக்கிற செய்முறை தேர்வில் கலந்து கொள்ளலாம்.

இவர்களுக்காக அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் என்.எ.எ.மேல்நிலைப்பள்ளி, அதே ஊரில் எஸ்.எஸ்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விருதுநகரில் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி, சூலக்கரையில் உள்ள கே.வி.எஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி ஆகியவைகளில் தனித்தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே இத்தேர்வில் பங்கேற்கும் தனித்தேர்வர்கள் 11-ம் தேதி கருத்தியல் தேர்வு எழுதும் மையங்களை அணுகி தங்களது பெயர் மற்றும் பாடங்களையும் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement