Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 விடைத்தாள் திருத்த முதற்கட்ட பணி துவக்கம்: நாளை முதல் திருத்தும் பணி ஆரம்பம்

 பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துவதற்கான முதற்கட்ட பணி, நேற்று துவங்கியது. சென்னை உட்பட, தமிழகம் முழுவதும், 73 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி, நாளை துவங்குகிறது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த 5ம் தேதி துவங்கியது; வரும் 31ம் தேதி முடிகிறது. சென்னையில், நான்கு உட்பட, மாநிலம் முழுவதும், 73 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடக்க உள்ளது. விடைத்தாள்களின் ரகசியம் கருதி, மையங்களின் விவரம் வெளியிடப்படவில்லை. முதற்கட்டமாக, போலீஸ் பாதுகாப்புடன், விடைத்தாள் கட்டுகள், நேற்று பிரிக்கப்பட்டன. அந்தந்த மண்டல பொறுப்பு கல்வி அதிகாரிகள், முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், விடைத்தாள் கட்டுகளை, தேர்வு மையத்தில் இருந்து வந்த பட்டியலின் படி, சரிபார்க்கும் பணியை மேற்கொண்டனர்.

இன்றும், விடைத்தாள் கட்டுகள் பிரிப்பு மற்றும் சரிபார்ப்பு பணி நடக்கும். நாளை, தமிழ் முதல் தாள் திருத்தும் பணி துவங்குகிறது. நாளை மறுநாள், தமிழ் இரண்டாம் தாள்; அதன்பின், ஆங்கில விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது. இதற்கான பட்டியலை தேர்வுத் துறை இயக்ககம் தயார் செய்து, ஆசிரியர்களின் பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளன. முறைகேடுகளை தடுக்க, ஆசிரியர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement