'பிளஸ் 2' பொதுத்தேர்வு இன்று (மார்ச் 5) துவங்குகிறது. இலவச பஸ் பாஸ் பயன்படுத்தும் மாணவர்களை புறக்கணிக்கக்கூடாது என பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
தேர்வு காலம் என்பதால் இலவச பஸ் பாஸ் பயன்படுத்தும் மாணவர் நலன் கருதி மாவட்டம் தோறும் கலெக்டர் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போக்குவரத்து கழக அதிகாரிகளின் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.
இதில் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அரசு அளித்த உத்தரவு:
இலவச பஸ் பாஸ் அடையாள அட்டை காண்பிக்கும்படி கட்டாயப்படுத்தக்கூடாது. பள்ளி சீருடை அணிந்திருந்தால் போதும். சீருடை அணிந்த மாணவர்கள் பஸ் ஸ்டாப் தவிர்த்து உதவி கேட்டால் பஸ்சில் ஏற்றி கொள்ள வேண்டும். தேர்வு முடியும் நாள் வரை தேவையான பஸ்களை சரியான நேரத்திற்கு இயக்க வேண்டும். பழுதடைந்த பஸ்களை இயக்கக்கூடாது. விதிமுறை மீறும் டிரைவர், கண்டக்டர்கள் குறித்து அருகில் உள்ள டிப்போக்களில் வண்டி எண், தடம் எண், நேரம், சம்பவ இடம் குறித்து புகார் கூறலாம். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து புகார்தாரருக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை