Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு ஏற்படுத்திய குழப்பம்

பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் அமல்படுத்தப்பட்ட புதிய நடைமுறை மற்றும் தவறாக இடம் பெற்ற கேள்வியால் மாணவர்கள் குழப்பம் அடைந் தனர். இத்தேர்வில் தமிழ் மீடியம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 'பி' வரிசை வினாத்தாளில் 48வது கேள்வி 'ஸ்டார் பேஸில் புல வகைகள் எத்தனை' என்பதற்கு பதில் 'ஸ்டார் பேஸில் பல வகைகள் எத்தனை' என மாறி கேட்கப்பட்டது. இதனால் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.
குழப்பம்:

இத்தேர்வில் இந்தாண்டு முதல் சில மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டன. இதன்படி 'அப்ஜெக்டிவ்' முறையில் முதல் 75 ஒரு மார்க் கேள்விகள் 75 நிமிடங்களில் எழுதி முடித்த பின் விடை நிரப்பிய ஓ.எம்.ஆர்., தாளை அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இதன்பின் தான் 'தியரி' பகுதி எழுத மாணவர்களை அனுமதிக்க வேண்டும். விடைகளை பால் பாயின்ட் பேனாக்களால் மட்டுமே நிரப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதற்குமுன் பென்சிலால் விடை நிரப்பப்பட்டது. அப்போது முதலில் தவறாக விடை நிரப்பி னாலும், பின் சரியான விடை தெரியவந்தால் அதை மாணவர்கள் திருத்தும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இம்முறை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் 75 நிமிடங்களில் எழுத வேண்டிய ஒரு மார்க் கேள்விகளை நன்றாக படிக்கும் பல மாணவர்கள் 25 நிமிடங்களில் நிரப்பி விட்டனர். ஆனால் பல பள்ளிகளில் 75 நிமிடங்கள் கழிந்த பின்பே 'தியரி' பகுதி எழுத அந்த மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதுவரை தேர்வறையில் அவர்கள் 'சும்மா' அமர்ந்திருந்தனர். சில தேர்வு மையங்களில் கண்காணிப்பாளர்- மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில் "இத்தேர்வில் மாணவர் களுக்கு ஏற்பட்ட குழப்பங்கள் அசவுரியங்களை கண்காணித்து அடுத்த தேர்வில் நிவர்த்தி செய்ய தேர்வுத் துறை முன்வர வேண்டும்" என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement