Ad Code

Responsive Advertisement

கேமரா மூலம் 24 மணி நேர கண்காணிப்பு:தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவு

''பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் விடைத்தாள் சேகரிப்பு, திருத்தும் மையங்களில் 24 மணி நேர கண்காணிப்பு கேமரா வசதி செய்ய வேண்டும்,'' என தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டார்.
நாளை (மார்ச் 19) பத்தாம் வகுப்பு தேர்வு துவங்குவதையொட்டி திருச்சி, அரியலுார் உட்பட 23 மாவட்ட கல்வி அதிகாரிகள் கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. இயக்குனர் தேவராஜன் தலைமையில் இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.

''விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் திருத்தும் மையங்களில் வசதிகள் செய்ய வேண்டும்,'' என இயக்குனர் தெரிவித்தார்.இணை இயக்குனர் உஷாராணி, முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி ஏற்பாடுகளை செய்தனர். பிளஸ் 2 வணிகவியல் தேர்வு விடைத்தாள்கள் பிரித்து கட்டுவதை இயக்குனர் பார்வையிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement