Ad Code

Responsive Advertisement

குரூப் 2 தேர்வு முடிவு வெளியீடு: மார்ச் 26 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) குரூப் 2(நேர்காணல் பணிக்கான இடங்கள்) பிரதான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் வரும் 26-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன.தமிழகத்தில் காலியாகவுள்ள ஆயிரத்து 130 குரூப் 2 பணியிடங்களுக்கான பிரதானத் தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.இந்தத் தேர்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை (மார்ச் 9) வெளியிடப்பட்டன. 



தேர்வில் வெற்றி பெற்ற 5 ஆயிரத்து 500 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் வரும் மார்ச் 26 முதல் தொடங்கவுள்ளன. இதற்கான தகவல்கள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தனித்தனியே தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.சென்னை பிராட்வேயிலுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில்சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெறும். இதற்கு அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும். இதன்பின், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement