Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: ஏப்ரல் 12-க்குள் முடிக்க உத்தரவு

 பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் 66 மையங்களில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலிருந்தும் சி.டி.க்கள் மூலம் மதிப்பெண் விவரங்கள் பெறப்படும்.

மொத்தம் ஒன்றரை கோடி விடைத்தாள் மதிப்பெண் விவரங்கள் சி.டி.க்களில் பெறப்படும் எனபதால் தவறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஒன்றுக்கு பலமுறை இந்த மதிப்பெண்கள் விவரம் சரிபார்க்கப்படும்.

அதன்பிறகே, அரசுத் தகவல் மையத்துக்கு இந்த விவரங்கள் அனுப்பப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். ஏப்ரல் இறுதிக்குள் இந்தப் பணிகள் அனைத்தையும் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்பிறகு, தமிழக அரசின் ஒப்புதலோடு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

நிகழாண்டும் வழக்கம்போல் மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement