Ad Code

Responsive Advertisement

சி.பி.எஸ்.சி. நடத்திய 12–ம் வகுப்பு கணித கேள்வித்தாள் கடினம் என புகார் கருணை மதிப்பெண்கள் வழங்க முடிவு?

மத்திய பள்ளி கல்வி வாரியம் சி.பி.எஸ்.சி., 12–வது வகுப்பு கணித தேர்வு, நாடு முழுவதும் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்வு வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக பரவலாக புகார்கள் எழுந்துள்ளன. இந்தப் புகார்களை மாணவ, மாணவிகள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் கூறுகின்றனர். பாடதிட்டத்துக்கு வெளியேயும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இது மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்தப் பிரச்சினையில் தீர்வு காண்பது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக சில பள்ளிக் கூட முதல்வர்களை சி.பி.எஸ்.சி. அழைத்திருக்கிறது.

கணித தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்குவது குறித்தும் சி.பி.எஸ்.சி. பரிசீலிக்கிறது.

இம்ப்ரூவ்மென்ட் தேர்வு நடத்தும் வாய்ப்பு பற்றியும் பரிசீலிக்கப்படுவதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement