Ad Code

Responsive Advertisement

மாணவ - மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க ரூ.1100 கோடி ஒதுக்கீடு

 மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ - மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இதுவரை 21.65 லட்சம் மாணவ- மாணவி யர் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். 2015-2016-ம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் இந்த முன்னோடித் திட்டத்திற்கு ரூ.1,100 கோடி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்கு ரூ.11,274.16 கோடி நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. இது 2015-2016-ம் ஆண்டின் திட்ட ஒதுக்கீட்டில் 20.46 சதவீதமாகும். இதுபோன்றே, பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கு ரூ.657.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது திட்ட ஒதுக்கீட்டில் 1.19 சதவீதமாகும்.மத்திய அரசு தனது பங்கான ரூ.982.31 கோடியை முழுமையாக அளிக்காத சூழ்நிலையிலும், உயர்கல்வி உதவித் திட்டத்தின் கீழ், இந்த அரசு 2014-2015-ம் ஆண்டில் ரூ.669.64 கோடி வழங்கியது. இந்த முயற்சிகளைத் தொடர்ந்திட 2015-2016-ம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில், பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி உதவித் தொகைத் திட்டங்களுக்கு முறையே ரூ.56.37 கோடியும், ரூ.674.98 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தற்போது 97,539 மாணவ - மாணவியர் தங்கிப் பயிலும் 1,304 ஆதிதிராவிடர் விடுதிகளும், 2,782 மாணவ - மாணவியர்கள் தங்கிப் பயிலும் 42 பழங்குடி யினர் விடுதிகளும் இயங்கி வருகின்றன. 2015- 2016-ம் ஆண்டில் மாணவ - மாணவியரின் உணவுச் செலவிற்காக ரூ.102.79 கோடி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.

2014-2015-ம் ஆண்டு ரூ.52.47 கோடி மதிப் பீட்டிலான பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள் ளது. 2015-2016-ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத் தில் இப்பள்ளிகளின் கட் டமைப்பை மேம்படுத்தவும், விடுதிகளைப் பராமரிக்கவும் ரூ.162.91 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சிறப்பு நிதியுதவியின் கீழ் ரூ.130 கோடி இந்நிறுவனத்திற்கு வரும் நிதியாண்டில் வழங்கப் படும்.

ஒருங்கிணைந்த பழங்குடி யினர் மேம்பாட்டுத் திட்டம் ரூ.50 கோடி ஒதுக்கீட்டில் 2015-2016-ம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத் தப்படும். பழங்குடியினர் உறைவிடப் பள்ளிகளில் விடுதி வசதிகளை மேம் படுத்துவதற்கென, இதி லிருந்து ரூ.10 கோடி தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு இப் பணிகளுக்கு சிறப்பு முக் கியத்துவம் அளிக்கப்படும்.

கடந்த நான்கு ஆண்டு களில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறு பான்மையின மாணவ - மாணவியருக்கான 77 புதிய விடுதிகளை அமைப்ப தற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. தற்போது 81,164 மாணவ-மாணவியர் பயன்பெறக்கூடிய 1,305 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. 2014-2015-ம் ஆண்டில் 10.36 லட்சம் மாணவ - மாணவியர்கள் கல்வி உதவித்தொகை மூலம் பயன்பெற்றுள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.216.38 கோடி செலவில், 218 விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரு கின்றன. 2015-2016-ம் ஆண்டில் பல்வேறு கல்வி உதவித் திட்டங்களுக்காக, ரூ.250.49 கோடியும், விடுதிப் பராமரிப்பு மற்றும் உணவுச் செலவினங்களுக்காக ரூ.82.69 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்காக ரூ.101.59 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு கல்வி உதவித் தொகை திட்டங்களை திறம் படச் செயல்படுத்துவதன் மூலமாக சிறுபான்மையின மாணவ- மாணவியர்கள் சிறப்பான பயனடைந்து வருகின்றனர். 2015-2016-ம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில், இத்திட்டங் களுக்காக ரூ.106.51 கோடி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது.2015-2016-ம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் சிறுபான்மையினர் நலனுக் காக ரூ.115.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement